இப்படியும் ஒரு உச்சம்- கொரோனா மொத்த பாதிப்பு, உயிரிழப்புகளில் ரஷ்யா, ஸ்பெயினை முந்தியது மகாராஷ்டிரா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் ரஷ்யாவை விட மகாராஷ்டிராவில்தான் அதிகம். அதேபோல் கொரோனா உயிரிழப்புகளில் ஸ்பெயின் நாட்டைவிட மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகம்.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,94,33,080; உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,32,390; கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,12,64,646.

ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்

ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடம்

ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் ஒரேநாளில் 81,911 பேரும் அமெரிக்காவில் 37,537; பிரேசிலில் 19.089 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உலக அளவில் உயிரிழப்புகள்

உலக அளவில் உயிரிழப்புகள்

அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 67,48,607; இந்தியாவில் 49,26,914; பிரேசிலில் 43,49,544 ஆகவும் உள்ளது. கொரோனா மரணங்களில் அமெரிக்காவில் 1,98,974; பிரேசிலில் 1,32,117; இந்தியாவில் 80,808 ஆக இருக்கிறது. மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 70,821.

உலக நாடுகளில் குணமடைந்தோர்

உலக நாடுகளில் குணமடைந்தோர்

உலக நாடுகளில் அமெரிக்காவில் 40,24,080 பேர் கொரோனாவால் குணமடைந்துவிட்டனர். இந்தியாவில் 38,56,246 பேரும் பிரேசிலில் 36,13,184 பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடந்துவிட்டனர். தற்போதைய நிலையில் அமெரிக்காவில் 25,25,553 பேரும் இந்தியாவில் 9,89,860 பேரும் பிரேசிலில் 6,04,243 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் (ஆக்டிவ் கேஸ்கள்).

மகாராஷ்டிராவில் படு உச்சம்

மகாராஷ்டிராவில் படு உச்சம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10,77,374 ஆக இம்மாநிலத்தில் உள்ளது. இது ரஷ்யா நாட்டின் பாதிப்பைவிட அதிகம். ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,68,320. மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29,894; இது ஸ்பெயின் நாட்டின் உயிரிழப்பை விட அதிகம். ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் 29,848.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+