நாங்க இருக்கோம்.. காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாய் வந்த ஆதித்ய தாக்கரே! பாஜகவை சாடிய கெஜ்ரிவால்..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஜம்மு & காஷ்மீரில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வரும் காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேறி வருவது குறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே, அங்கு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இடம்பெயர விரும்பும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் திறந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் காஷ்மீரில் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீரில் மீண்டும் குடியமர்தப்பட்டுள்ள காஷ்மீர் பண்டிட் மக்களுக்கெதிராகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கக் கோரி அவ்வின மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஷ்மீர் படுகொலை

காஷ்மீர் படுகொலை

கடந்த ஒருவாரத்தில் காஷ்மீரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள மக்களை தொடர்ந்து குறி வைத்துக் கொலை செய்து வருகின்றனர். ஆசிரியை, வங்கி மேலாளர், பண்டிதர், தொழிலாளி என கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆதித்யா தாக்கரே ஆதரவு

ஆதித்யா தாக்கரே ஆதரவு

இந்நிலையில் காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேறி வருவது குறித்து பேசிய மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே, நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இடம்பெயர விரும்பும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு மகாராஷ்டிராவின் கதவுகள் திறந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"நாங்கள் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆதரவளிப்போம். அங்கு நிலைமை நிலைமை மிகவும் நிலையற்றதாக உள்ளது. அவர்களுக்காக எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன.

கவலைக்கிடமாக உள்ளது

கவலைக்கிடமாக உள்ளது

"காஷ்மீர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதுபோன்ற சமயங்களில் மீண்டும் அந்த நிலை ஏற்படுவது வருந்தத்தக்கது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை, நாம் ஜம்மு காஷ்மீரில் பார்க்கும் காட்சி நல்லவையாக இல்லை என்றும் அவர் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்

அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்

இதற்கிடையில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக சாடியதோடு, காஷ்மீரி பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை" என்று குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், "1990ஆம் ஆண்டு மீண்டும் வந்துவிட்டது. அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. காஷ்மீரில் கொலைகள் நடக்கும்போதெல்லாம் உள்துறை அமைச்சர் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியதாக செய்திகள் வரும். இந்தக் கூட்டங்கள் போதும், இப்போது எங்களுக்கு நடவடிக்கை தேவை." என்றார்.

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சிக்கு வருவது எப்போதுமே காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றத்தை தூண்டுகிறது என்று குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், "கடந்த 30 ஆண்டுகளில், காஷ்மீரில் இரண்டு முறை பாஜக ஆட்சியில் இருந்தது, இரண்டு முறையும் காஷ்மீரி பண்டிட்டுகள் குடியேற வேண்டியிருந்தது" என்றார். மேலும், பா.ஜ., 'கேவலமான அரசியல்' செய்வதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். புட்காமில் ராகுல் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, போராட்டம் நடத்திய காஷ்மீரி பண்டிட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பதிலாக, பாஜக நிர்வாகம் போராட்டங்களை ஒடுக்கியது எனவும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+