ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை வரி ட்விட்.. குழம்பிப்போன நெட்டிசன்கள்.. உற்றுப்பார்த்தால் நம்ம 'தல' தோனி
முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோவை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார்.
டெல்லி: வெறுமனே மகிந்திரா & மகிந்திரா என்று கேப்ஷன் போட்டு ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் ஒரு பதிவு போட்டு இருந்தார். இதனால் சற்று குழம்பிப்போன நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்த பிறகுதான் ஆனந்த் மகிந்திராவின் இந்த கேப்ஷனுக்கு விடை கிடைத்தது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழில் நிறுவனங்களில் ஒன்று மகிந்திரா.
வாகன உற்பத்தி முதல் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

ஆனந்த் மகிந்திரா
அவரது ட்விட் பதிவுகள் பெரும்பாம்பாலும் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். தனக்கு பிடித்தமான துணுக்குகள், தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோக்கள், எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள், அசாத்திய திறமைகளுடன் செய்யப்படும் வேலைப்பாடுகள், புதுமையான தொழில் நுட்பங்கள் குறித்த பல்வேறு வகையான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பகிந்து வருகிறார். ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட்கள் எல்லாம் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரப்பப்படும்.

மகிந்திரா & மகிந்திரா என ட்விட்
ஆனந்த் மகிந்திராவிற்கு ட்விட்டரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லும் அளவுக்கு அவரது பதிவுகளுக்கு லைக்குகள் அள்ளும். ஆனந்த் மகிந்திராவை ட்விட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஆனந்த் மகிந்திரா இன்று பதிவிட்ட ஒரு பதிவு இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வழக்கமாக தனது பதிவுகளுக்கு அழகான கேப்ஷன்களை பதிவிடும் ஆனந்த் மகிந்திரா.. இந்த பதிவுக்கு வெறுமனே மகிந்திரா & மகிந்திரா என்று மட்டுமே பதிவிட்டு இருந்தார்.

குழம்பிப்போன நெட்டிசன்ஸ்
இதனால் சற்று குழம்பிப்போன நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்த பிறகுதான் ஆனந்த் மகிந்திராவின் இந்த கேப்ஷனுக்கு விடை கிடைத்தது. ஆம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி டிராக்டரை ஓட்டி தனது தோட்டத்தில் விவசாய வேலைகளில் ஈடுபடும் வீடியோவைத்தான் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருந்தார். இந்த பதிவு இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. தோனி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நேற்றே இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் பெரிதும் தோனி பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதாவதுதான் தோனி பதிவுகளை போடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

லட்சக்கணக்கான லைக்குகள்
கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோனி தனது பண்ணை தோட்டத்தில் வைத்து எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதன்பிறகு தற்போதுதான் மற்றொரு போஸ்ட் போட்டுள்ளார். எப்போதாவது தோனி பதிவுகள் போட்டாலும் இணையத்தில் அவரது பதிவுக்கு என இருக்கும் மவுசு குறைவதே இல்லை. தோனியின் இந்த பதிவு லட்சக்கணக்கான லைக்குகளையும் ஆயிரக்கணக்கான கமெண்டுகளையும் வாரிக்குவித்துள்ளது. அண்மையில் தோனி விரைவில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி அவரது ரசிகர்களை ரசிக்க வைத்திருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications