எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.. கட்சியினர் அமைதி காக்க வேண்டும்.. டார்கெட்டை சொன்ன டிகே சிவக்குமார்
டெல்லி: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 135 இடங்கள் மட்டுமே வென்றுள்ளது. இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்று கர்நாடக துணை முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 10 ஆம் தெதி மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் 135 இடங்களில் அபார வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.

முதல்வர் பதவியை பெறுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் தலைமையிடத்தில் முட்டி மோதினர். இதனால் இருவரையும் சரிகட்ட காங்கிரஸ் தலைமை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடைசியில் சோனியா காந்தி தலையிட்டு பேசியதால் டிகே சிவக்குமார் தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்தார்.
முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையா முதல்வர் பதவியிலும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வர் பதவியிலும் இருக்கலாம் என்ற பார்முலாவை காங்கிரஸ் மேலிடம் வகுத்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.
பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். விரைவில் அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
நாளை சட்டப்பேரவை கூடுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். புதிய அரசு அமைந்ததையடுத்து கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாக நீடித்த அரசியல் பரபரப்பு சற்று தணிந்துள்ளது. இந்த நிலையில், இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, டிகே சிவக்குமார் கூறுகையில், "ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நமது கவனம் சரியான இடத்தில் இருக்க வேண்டும். அதாவது வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கவனம் இருக்க வேண்டும்.
இப்போதில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்கு நாம் எல்லாம் கடினமாக உழைக்க வேண்டும். தற்போது கிடைத்து இருக்கும் வெற்றி வெறும் தொடக்கம் தான். எனவே ஒரே ஒரு வெற்றியுடன் சோம்பேறியாகி விடாதீர்கள்.
எனது வீட்டு முன்பாகவோ.. சித்தரமாமையா வீட்டு முன்போ காரணம் இன்றி கட்சி தொண்டர்கள் கூட வேண்டாம். மாநிலத்தில் அமைதியை பேண வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வலுவான ஒரு நிர்வாகத்தை கொடுக்க வேண்டியுள்ளது. எந்த ஒரு தலைவருக்கு எது ஆனாலும் கட்சிக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சிக்காக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்" என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications