Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி என்ன சாதித்தார்-னு கிரிக்கெட் மைதானத்திற்கு அவரது பெயர்? எல்லாம் வெறுப்பு தான்.. சிவசேனா தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகத்தை அவமதிக்காமல் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் கவுரவிக்கப்பட்டிருக்கலாம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான் சந்தின் பெயரில் வழங்கப்படும் என மத்திய பாஜக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவமதிக்கும் நோக்கிலேயே பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகப் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் சிவசேனாவும் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளது.

 அரசியல் செய்கிறது

அரசியல் செய்கிறது

இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள கட்டுரையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகத்தை அவமதிக்காமல் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் கவுரவிக்கப்பட்டிருக்கலாம். மத்திய அரசு இந்த விஷயத்தில்கூட அரசியல் செய்கிறது. தயான் சந்த் பெயரில் புதிதாக ஒரு பெரிய விருதை அறிவித்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மோடி அரசை நாம் பாராட்டியிருக்கலாம்.

 களங்கப்படுத்தக் கூடாது

களங்கப்படுத்தக் கூடாது

நாட்டின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை அளித்த இரண்டு முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் தியாகத்தை நாம் கேலிக்குரியதாக்கக் கூடாது. இந்திரா காந்தி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியும் பயங்கரவாத தாக்குதலில் தான் உயிரிழந்தார். ஜனநாயகத்தில் வேறுபாடுகளுக்கு இடமுண்டு, ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பு செய்த பிரதமர்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தக் கூடாது.

 என்ன லாஜிக்

என்ன லாஜிக்

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று பெயர் மாற்றுவது அரசியல் விளையாட்டு தானே தவிர வேறு எதுவும் இல்லை. பாஜகவின் சிலர் 'ராஜீவ் காந்தி எப்போது ஹாக்கி விளையாடினார்?' என அறிவாளித்தனமாக கேள்வி கேட்கின்றனர். பிரதமர் மோடி கிரிக்கெட்டில் என்ன சாதனை செய்துவிட்டார் என அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயரை வைத்தார்கள். அதேபோலத் தான் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லியின் பெயரை வைத்தார்கள். அங்கெல்லாம் இந்த கேள்வியை கேட்கலாம். சொல்லப்போனால் மக்கள்தான் இந்த கேள்விகளைக் கேட்கிறார்கள்.

 வெறுப்பு அரசியல்

வெறுப்பு அரசியல்

மத்திய பாஜக அரசு ராஜீவ் காந்தியின் பெயரை முற்றிலுமாக நீக்குவதன் மூலம் வெறுப்பு அரசியல் செய்கிறது. பழிவாங்கும் மனப்பான்மையுடன் யாராலும் ஒரு அரசை நடத்த முடியாது, இந்திய ஹாக்கி டோக்கியோ ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதக்கத்தை வென்றுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது மோடி அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்று மாற்றியுள்ளது. தயான் சந்த்தை முந்தை அரசுகள் மறுந்துவிட்டத்தைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

 தயான் சந்த்

தயான் சந்த்


1956ஆம் ஆண்டில் தயான் சந்திற்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதேபோல தயான் சந்தின் பிறந்தநாள் 'தேசிய விளையாட்டு தினமாக' கொண்டாடப்படுகிறது. அவரது பெயரில் தேசிய விருதுகளும் வழங்கப்படுகின்றன. மேஜர் தயான் சந்த் பண்டிட் நேருவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். நிலைமை இப்படியிருக்க நாட்டிற்காகத் தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் பெயரை நீக்கி மேஜர் தயான் சந்த் பெயரை அங்குப் புகுத்துவது சரியல்ல.

 ஒலிம்பிக் பட்ஜெட்

ஒலிம்பிக் பட்ஜெட்

ஒலிம்பிக் போட்டிகளில் பெறப்பட்ட பதக்கங்களை மோடி அரசு இன்று கொண்டாடுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் ஆக ஒதுக்கப்படும் தொகையை சுமார் ரூ. 300 கோடி வரை குறைத்துள்ளது. சஹாரா ஸ்பான்சர்ஷிப்பை விட்டு வெளியேறிய பிறகு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சராக இருந்து காத்தார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+