மணிப்பூரில் மத்திய அரசு முயற்சிக்கு கடும் பின்னடைவு.. பொருளாதாரத் தடையை அமல்படுத்திய 'குக்கி'கள்!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து பொதுமக்களும் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக குக்கி இன மக்கள் காலவரையற்ற பொருளாதாரத் தடையை அமல்படுத்தி இருப்பதால் பதற்றம் நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 8-ந் தேதி முதல் பொதுமக்களின் தடையற்ற சுதந்திரமான நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனை மீறுவோர் மீது அடும் நடவடிக்கை பாயட்டும் எனவும் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினரும் மக்களின் இயல்புவாழ்க்கையை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் குக்கி இன மக்களோ, தங்களது இனத்தவர் அதிகமாக வாழும் மாவட்டங்களை ஒருங்கிணைத்து சுயாட்சி நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி குக்கி இன மக்கள் வாழும் மாவட்டங்களில் காலவரையற்ற பொருளாதாரத் தடையையும் அமல்படுத்தி உள்ளனர். இதனால் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குக்கி இன மக்கள் வாழும் பிரதேசங்களும் மைத்தேயி இன மக்கள் வாழும் பகுதிகளும் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புகள் இன்றி துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பாதுகாப்புப் படையினரோ இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மணிப்பூர் குறித்த அமித்ஷாவின் உத்தரவு என்ன?
மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் மார்ச் 1-ந் தேதி உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் ஆளுநர், மத்திய உள்துறைச் செயலாளர், புலனாய்வு அமைப்பின் இயக்குநர், ராணுவ துணைத் தலைவர், கிழக்கு கட்டளையின் ராணுவத் தளபதி, எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), அசாம் ரைபிள்ஸ் இயக்குநர் ஜெனரல்ள், மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், மணிப்பூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்களின் தடையற்ற நடமாட்டம் உறுதி செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவு முனையங்களின் இருபுறமும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா உத்தரவிட்டார். மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த வலைப்பின்னலும் தகர்க்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications