மகர சங்கராந்திக்கு மட்டுமே திறக்கப்படும் மர்ம கோயில்.. கோட்டைக்குள் மறைந்து இருக்கும் ரகசியம்
இம்பால்: ஆண்டுக்கு ஒரே ஒருநாளில் அதாவது மகர சங்கராந்திக்கு மட்டுமே திறக்கப்படும் ஒரு வினோதமான கோயில் மத்திய பிரதேசத்தில் உள்ளது. அஜய்கர் கோட்டையில் உள்ள இந்தக் கோவிலில் நிரந்தரமான சிலைகள் எதுவும் இருக்காது. மகரசங்கரந்திக்காக மட்டும் ரேவா அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு வழிபடப்படுகிறது. இந்தக் கோயிலில் கடைபிடிக்கப்படும் இந்த வினோதமான சடங்குகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
அறுவடை திருநாள் தை 1 பொங்கல் விழா நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் விழாவாக கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் மகர சங்கராந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் கோவில்களில் விசேஷ பூஜைகளும் நடைபெறுகின்றன.

ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும்
அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கோவில் ஆண்டுக்கு ஒரே ஒருநாள் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் நடைபெறும் தனித்துவமான பூஜைகள் பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் கவருவதாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள அந்தக் கோவில் பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் அஜய்கர் கோட்டையில் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் ஆண்டுக்கு ஒரே ஒருநாளில் மட்டுமே திறக்கப்படும். இதனால் இந்தக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தொலைதூர பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். சந்தேலர்களால் 9ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
குளத்தில் நீராடும் பக்தர்கள்
அஜய்கர் கோட்டையில் உள்ள இந்தக் கோவில், பாபா அஜய்பாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். மகர சங்கராந்தி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வை காண மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள்கிறார்கள். இந்தக் கோவிலில் நிரந்தரமான சிலைகள் எதுவும் இருக்காது.
மகர சங்கராந்திக்காக மட்டும் அந்தச் சிலை ரேவா அருங்காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வழிபாட்டிற்காக நிறுவப்படும். மத சடங்குகள் முடிந்த பிறகு, அது அருங்காட்சியகத்திற்குத் திருப்பிக் கொண்டு செல்லப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் அருகிலுள்ள குளத்தில் நீராடுவதையும் பக்தர்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதுகின்றனர்.
ரகசிய சுரங்கங்கள்
இந்த கோட்டையில், சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களுக்குள் சந்தேலர் காலத்தைச் சேர்ந்த பல புதையல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, எனினும், அது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கோவில் இருக்கும் இடம் மற்றும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது போல, சூர்ய அஸ்தமனத்திற்கு அங்கு பலரும் செல்ல யோசிக்கிறார்கள். அதே நேரத்தில் சில தாந்திரீக சடங்குகளுக்காக இரவு நேரத்தில் சிலர் அங்கு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் இந்த கோயில் மர்மமான கோயிலாக பார்க்கப்படுகிறது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications