சீனாவை காலி செய்யும் இந்தியா.. ஐபோன் உற்பத்தியில் சரித்திர சாதனை! இதற்கு முன்பு இப்படி நடந்ததே இல்லை
டெல்லி: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் செல்போன் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 2025இல் ஆப்பிள் நிறுவனம் $50 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இது சர்வதேச விநியோகச் சங்கிலியில் சீனாவுக்குப் போட்டி தரும் வகையில் இந்தியாவும் முக்கிய நாடாக வளர்ந்து வருவதையே காட்டுகிறது.
பல ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் எலக்ட்ரிக் பொருட்களின் உற்பத்தி மையமாகச் சீனாவே இருந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கூட தனது ஐபோன்களை அமெரிக்காவில் டிசைன் செய்தாலும் சீனாவிலேயே உற்பத்தி செய்து வந்தது. பல ஆண்டுகளாகவே இதே நடைமுறை தொடர்ந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் சீனா விதித்த கட்டுப்பாடுகள் டெக் நிறுவனங்களை யோசிக்க வைத்தன.

இந்தியா படைத்த சாதனை
ஒரே நாட்டை நம்பி இருப்பது சரியானதாக இருக்காது என்பதை டெக் நிறுவனங்கள் புரிந்து கொண்டன. இதனால் கடந்த சில ஆண்டுகளில் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்திக்கு இந்தியாவை ஒரு முக்கிய மையமாக மாற்றியுள்ளது. 2025ஸ் இந்தியாவில் இருந்து $50 பில்லியன் (சுமார் ரூ. 4.51 லட்சம் கோடி) ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவுக்குக் கிடைத்த மிக முக்கிய வளர்ச்சி என்கிறார் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!
3.5 லட்சம் வேலை வாய்ப்புகள்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கும், உற்பத்திப் பொருளாதாரமாக மாறும் நமது தேடலுக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக, 2025இல் ஆப்பிள் நிறுவனம் $50 பில்லியன் மதிப்புள்ள மொபைல் போன்களை ஏற்றுமதி செய்கிறது" என்று பதிவிட்டுள்ளார். 2025-2026 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) ஆப்பிள் இந்தியாவில் இருந்து $16 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 3.5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
முக்கிய காரணம்
மத்திய அரசு கடந்த 2022இல் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க PLI எனப்படும் தயாரிப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. அந்தத் திட்டம் வந்த பிறகே ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்தது.
ஆப்பிளை பொறுத்தவரை அவர்களுக்கு இப்போது இந்தியாவில் 5 ஆலைகள் உள்ளன. அதில் மூன்று உற்பத்தி மையங்கள் டாடாவுக்கு சொந்தமானவை.. மற்ற இரண்டை ஃபாக்ஸ்கான் நடத்தி வருகிறது.. இவை நாட்டில் உள்ள பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME-கள்) உள்ளடங்கிய 45க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வலுவான விநியோகச் சங்கிலிக்கு அடித்தளம் அமைத்துள்ளன.
ஆப்பிள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச செல்போன் நிறுவனங்களும் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய ஆரம்பித்தது. சாம்சங் நிறுவனம் 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் $17 பில்லியன் மதிப்பிலான சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.
8 மடங்கு உயர்வு
அஷ்வினி வைஷ்ணவ் தனது பதிவில், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக் துறை உற்பத்தி 6 மடங்காகவும், ஏற்றுமதி 8 மடங்காகவும் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அவர் மேலும், "இப்போது நாட்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் முதல் 3 இடங்களில் எலக்டிரானிக் பொருட்களும் வருகிறது. வெறுமன ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லை.. 46 உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டங்கள், லேப்டாப், சர்வர் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டில் நான்கு செமிகண்டக்டர் ஆலைகளும் உற்பத்தியைத் தொடங்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications