சைலண்ட்டா இருந்தாங்க.. இப்போ வேற லெவல்.. மோகன்லால் மகளுக்கு இவ்வளவு திறமையா?
புதுடெல்லி: நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மாயா கவிதைப் புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிடுகிறார்.
பொதுவாக திரை நட்சத்திரங்களின் வாரிசுகள், சினிமா துறையையே விரும்பி தேர்ந்தெடுப்பது வழக்கம். எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதற்காக மட்டும் அல்ல.
சிறு வயதில் இருந்து ரசிகர்கள் கொண்டாடும் தன் பெற்றோரைப் பார்த்து பார்த்து, கலை ஆர்வம் அவர்களையும் தொற்றிக் கொள்வதனால் தான்.
ஆனால், இங்கு ஒருவர் சற்று வித்தியாசப்படுகிறார். தந்தை ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது, எழுத்து, சிந்தனை, ஓவியம் என்று ஒரு படைப்பாளியாக தன்னை முன்னிறுத்துகிறார்.

விரைவில் கவிதை புத்தகம்
அவர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகள் விஸ்மாயா. கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (Grains of Stardust) என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதைப் புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தை விஸ்மாயா வெளியிட்ட போது அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

எளிமையாக இருக்கும்
இந்நிலையில் அவர் பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், " 'கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' புத்தகம் திடீரென உருவானது தான். நீங்கள் அதை படிக்கும் பொழுது, மிக எளிமையாக உணருவீர்கள்.

சிறிய வயதில் எழுதியது
சப்வேயில் காத்திருக்கும் போதோ, எனக்கு பிடித்த பாடலைக் கேட்கும் போதோ ஏதாவது ஒரு பெயிண்டிங் அல்லது இயற்கை காட்சியை பார்க்கும் பொழுது என்னுள் தோன்றிய கவிதைகளை அப்படியே டைப் செய்திருக்கிறேன். அவற்றில் பல கவிதைகள் நான் சிறிய வயதில் எழுதியது.

முன்னுரை எழுதிய தந்தை
அதேபோல் நான் வரைந்த ஓவியங்கள் சிலவற்றை காட்சிப்படுத்தலாம் என்று என் சகோதரர் எனக்கு ஐடியா கொடுத்தார்" என்று தெரிவித்துள்ளார். மகளின் இந்த முதல் படைப்பிற்கு தந்தை மோகன்லால் முன்னுரை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மோகன்லால் மகன் பிரணவ் ஒரு நடிகர் என்பது கூடுதல் தகவல்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications