இதுதான் இந்தியா.. பணிந்தது மாலத் தீவு.. டெல்லி வருகிறார் அதிபர்! மோடியை விமர்சித்தவர்கள் ராஜினாமா
டெல்லி: இந்தியாவுடன் சமீபகாலமாக முரண்டு பிடித்துக் கொண்டிருந்த மாலத்தீவு அரசாங்கத்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த இரண்டு பேர் பதவி விலகினர். இந்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவுடன் நட்பு பாராட்டிய நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. இதனிடையே கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அப்போது முதலே அவர்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவர்கள் நாட்டில் இருந்த இந்திய ராணுவப் படையை வெளியேற்றினார்கள்.

அதேபோல அந்த நாட்டின் இரண்டு அமைச்சர்கள் மரியம் ஷிவுனா, மல்ஷா ஷெரிப் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் சமூகவலைதளங்களில் கருத்துகளை முன் வைத்தனர். கடல்சார் கண்காணிப்புக்காக, இந்திய ராணுவம் அதிநவீன ஹெலிகாப்டர்கள், டார்னியர் ரக விமானம் உள்ளிட்டவற்றை மாலத்தீவுகளுக்கு வழங்கியிருந்தது. இந்த கருவிகளை இயக்குவதற்காக சுமார் 100 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருந்தனர். அவர்களை வெளியேற்றியதால், இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.
அதிபர் முகமது மூயிஸ் சீனாவுடன் நெருக்கமாக இருப்பதால், சீனாவின் நெருக்கடி காரணமாக இப்படி செய்வதாகவும் கூறப்பட்டது. இந்திய ராணுவத்தை வெளியேற்றிவிட்டு, மாலத்தீவு அரசாங்கம் சீனாவிடம் ராணுவ உதவி கேட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது. இந்தியா - மாலத்தீவு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. நாளாக நாளாக காட்சிகள் மாறும் என்பதுபோல, தற்போது இந்தியா - மாலத்தீவு இடையே இணக்கமான சூழல் உருவாக தொடங்கியுள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு, மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பதவியேற்பு விழாவில் முகமது மூயிஸ் கலந்து கொண்டார். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த மாதம் மாலத்தீவு சென்றிருந்தார். அப்போது முதலே மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன.
அதன் தொடர்ச்சியாக மோடி குறித்து விமர்சித்த, இரண்டு அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுவும் இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், முதல்முறையாக அரசுமுறைப் பயணத்துக்காக விரைவில் இந்தியா வரவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு நாடு அதிபரின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் ஹீனா வாலேட் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், அதிபரின் இந்திய பயணம் எப்போது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்தியாவுக்கு அவரின் அரசுமுறைப் பயணம் உறுதியாகிவிட்டது. தேதிகளை இறுதி செய்வது குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் வசதியான தேதிகளை உறுதி செய்து பயணத்தைத் திட்டமிடுவோம் என்று கூறியுள்ளார்.
முகமது மூயிஸ், அடுத்த வாரமே டெல்லி வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்த அதே நாளில், அந்த நாட்டு,அதிபர் முகமது மூயிஸின் இநிதிய பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா -மாலத்தீவு நாடுகள் இடையே மீண்டும் இணக்கமான சூழல் உருவாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications