Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛இந்தியர்கள் அழுக்கானவர்கள்’.. மோடி வீடியோ பதிவுக்கு மாலத்தீவு தலைவர் சர்ச்சை பதில் - ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு சென்றது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தான் மாலத்தீவை ஆட்சி செய்யும் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் கூறியுள்ள கருத்து சர்ச்சையாகி உள்ளது. இதனால் நெட்டிசன்கள் கொதித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தில் நடந்த விழாவில் புதிய விமான முனையம் உள்பட தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

 Maldives Zahid Rameez who made controversial comments about Indians after reply the PM Modi Lakshadweep photo

அதன்பிறகு பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து லட்சத்தீவுக்கு சென்றார். இந்தியாவின் ஒருபகுதியான லட்சத்தீவின் கவரட்டி நகரில் நடந்த விழாவில் பிரமதர் மோடி லேப்டாப்கள், இருசக்கர வாகனங்கள், விவசாய கடன் அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். இதுமட்டுமின்றி லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். அதன்பிறகு மறுநாளில் அந்த போட்டோக்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், ‛‛லட்சத்தீவு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் உள்ள மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பதிவு என்பது இணையதளத்தில் வேகமாக பரவ தொடங்கியது. மிஸ்டர் சின்ஹா என பெயர் கொண்ட எக்ஸ் பயனாளர் பிரதமர் மோடி லட்சத்தீவில் பிரிஸ்டீன் பீச்சில் நடந்து செல்லும் வீடியோவை பதிவிட்டு, ‛‛ என்ன ஒரு பெரிய மூவ்.. இது சீனாவின் கைப்பாவையாக இருக்கும் மாலத்தீவுக்கான பெரிய பின்னடைவு. அதோடு லட்சத்தீவின் சுற்றுலா மேம்பாட்டுக்கு இது பெரிய பூஸ்ட்டாக அமையும்'' என தெரிவித்து இருந்தார்.

இந்த பதிவை பார்த்தவுடன் மாலத்தீவை ஆட்சி செய்து வரும் பிபிஎம் கட்சியின் கவுன்சில் உறுப்பினர் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை கேலி செய்தும், இனவெறியை காட்டும் வகையிலும் பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஜாஹித் ரமீஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த நடவடிக்கை என்பது பெரியது தான். இருப்பினும் எங்களுடன் போட்டியிடுவது என்பது ஒரு மாயை போன்றது. ஏனென்றால் நாங்கள் வழங்கும் ஆபர்களை போல் அவர்கள் எப்படி வழங்க முடியும்? எப்படி சுத்தமாக இருக்க முடியும்? மேலும் அறைகளில் இருந்து வரும் நிரந்தரமாக வரும் கெட்ட நறுமணம் பெரிய பின்னடைவாக இருக்கும்'' என தெரிவித்தார்.

இதன்மூலம் ஜாஹித் ரமீஸ் இந்தியர்களை சுகாதாரமற்றவர்கள் எனவும், அழுக்கானவர்கள் எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். இதனல் தற்போது ஜாஹித் ரமீசுக்கு எதிராக நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஜாஹித் ரமீசு இனவெறி சார்ந்த கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் பலரும் சாடி வருகின்றனர்.

பொதுவாக மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இனம், மொழி, கலாசாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இருதரப்பும் ஒற்றுமை உள்ளது. அதோடு 1965ல் விடுதலை பெற்ற பிறகு மாலத்தீவை சுதந்திர நாடாக அறிவித்த முதல் நாடு இந்தியா தான். அதோடு மாலத்தீவுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளது. 2018 ல் மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் முகமது சோலி பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்த வேளையில் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு இன்னும் வலுப்பட்டது.

கொரோனா பரவலின்போது இந்தியாவில் இருந்து தடுப்பூசி மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு கடந்த ஆண்டு மாலத்தீவு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இப்ராஹிம் முகமது சோலி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் முகமது முயிஸின் வெற்றி பெற்று அதிபரானார். இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், சீனாவுக்கான ஆதரவு கொள்கையும் கொண்டவர். இதனால் தற்போது இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் மாலத்தீவின் பிபிஎம் கட்சியின் ஜாஹித் ரமீஸ் தான் தற்போது இந்தியர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+