ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம்.. .இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தலைவர்களுடன் கார்கே இன்று ஆலோசனை
டெல்லி: 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அதேபோல ஒருபுறம் அமளி இருந்தாலும் மறுபுறம் டெல்லி நிர்வாக மசோதா, தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும் பெரும்பாலான நேரம் இரண்டு அவைகளும் அமளி காரணமாக முடங்கியே இருந்தன. பின்னர் ஒரு வழியாக கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த கூட்டத்தொடரில் ஒற்றுமையுடன் எப்படி பாஜகவை எதிர்கொள்வது என்பது குறித்து இன்று இந்தியா' கூட்டணியை சேர்ந்த நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கான கூட்டம் கார்கே இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்தியா கூட்டணியை பொறுத்த அளவில் முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரிலும், மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது நான்காவது கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications