ஆஹா.. இழுபறி ஆரம்பிச்சிடுச்சி? பல்டியடிக்கும் காங்கிரஸ்? முதல்வர் யார் என முடிவே எடுக்கவில்லையாம்
டெல்லி: கர்நாடகா மாநில முதலமைச்சர் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பார் என கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே தொடர்ந்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்தும் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரிடம் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சித்தராமையாவையே கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இது தொடர்பாக கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம் கொடுத்து உள்ளார். அதில், முதலமைச்சர் யார் என்ற ஆலோசனை நடைபெற்று வருவதால் கர்நாடக முதலமைச்சர் பெயரை இன்று அல்லது நாளை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பார் என்று அவர் கூறி இருக்கிறார்.
"கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்றக் குழு, தங்கள் தலைவரையும் அடுத்த முதலமைச்சரையும் தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கி உள்ளது. எனவே மல்லிகார்ஜுன கார்கே முதலமைச்சரின் பெயரை அறிவிப்பார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் இன்று அல்லது நாளை அறிவிப்புகள் வெளியாகலாம்." என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் கூறி உள்ளார். இன்று காலை கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையாவை காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துவிட்டது என்று தகவல் வெளியாகின. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவை சிவகுமார் நேரில் சந்தித்து மீண்டும் பேசினார்.
அப்போது அவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் யார் என்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்ற ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இன்று நடைபெற்ற டிகே சிவகுமார் - மல்லிகார்ஜுன கார்கே சந்திப்புக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்று மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ் ஆட்சியை பிடித்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் இருக்க, முதலமைச்சர் பதவிக்காக தலைவர்கள் முட்டிமோதிக்கொண்டு உள்ளார்கள்.

தேர்தலுக்கு மறுநாள் நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒருமனதாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தலைமை அழைத்தது.
சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் கடந்த மே 15 ஆம் தேதி டெல்லிக்கு சென்று தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் நேற்று டிகே சிவகுமாரும் டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று இரவு அல்லது நாளை அடுத்த முதலமைச்சர் யார் என்ற முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications