"உயிரிழப்பு எவ்வளவு!" அவர் ஒன்னு சொல்ல.. இவர் ஒன்னு சொல்ல.. வாக்குவாதம் செய்த மம்தா- அஸ்வினி வைஷ்ணவ்
டெல்லி: ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மம்தா அனைவருக்கும் முன்பு வாக்குவாதம் செய்து கொண்டனர்.
ஒடிசாவில் நேற்றைய தினம் மிக மோசமான விபத்து நடந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. வெறும் 20 நிமிடங்களில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை செய்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு விபத்தாக இது கருதப்படுகிறது.
விபத்து: கொல்கத்தாவில் இருந்து மதியம் 3.20 மணிக்குக் கிளம்பிய இந்த ரயில் ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் இரவு 7 மணிக்கு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் சுமார் 10 பெட்டிகள் தடம் புரண்டன. சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா சம்பவ இடத்திற்கு வந்து பணிகளைப் பார்வையிட்டார். அப்போது மம்தா செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், உயிரிழந்தோர் குறித்த தகவலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்: மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசும் போது அஸ்வினி வைஷ்ணவ் உடன் இருந்தார். அப்போது மம்தா மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500ஐ தாண்டலாம் எனக் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட அஸ்வினி வைஷ்ணவ், மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகள் முடிந்த பிறகு உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு என்று ரயில்வே அமைச்சரிடம் மம்தா கேட்டார். அதற்கு 238 பேர் உயிரிழந்ததாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கு மம்தா, "இது நேற்று வந்த எண்ணிக்கை.. எங்களிடம் நேற்று 238 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்கள்" என்றார். இப்படி இரு தலைவர்களும் மாறி மாறி பேசியதால் அங்குச் சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.
உயிரிழப்புகள் ரயில்வே வெளியிட்ட தரவுகளின்படி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288ஆக உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 56 பேர் படுகாயமடைந்துள்ளனர். திரிணாமுல் தலைவர் மம்தா முன்பு ரயில்வே அமைச்சராக இருந்தவர். இந்த விபத்தால் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மம்தா மேலும் கூறுகையில், "ரயில்வே துறையை நாம் தனித்துவமாக நடத்த வேண்டும். இதன் காரணமாகவே ரயில்வேக்கு தனி பட்ஜெட் இருந்தது. ரயில்வே எனக்குக் குழந்தை போன்றது. நானும் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவர் தான். ரயில்வே அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கவும் தயாராக உள்ளேன்" என்றார். மேலும், அமைச்சர் அருகில் இருக்கும் போதே, விபத்துகளைத் தடுக்க பயன்படும் கவாச் தொழில்நுட்பம் போதியளவில் அமல்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "நாங்கள் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றியே வருகிறோம். இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல. மீட்புப் பணிகள் முடிந்துவிட்டன. இப்போது மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications