மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த மாதம் இறுதியில், மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை உட்பட 10 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

லட்சுமியின் வெற்றி: 'லட்சுமியின் பண்டார்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ₹500 அதிகரிக்கப்படும். (பொதுப்பிரிவினருக்கு ₹1,500, SC/ST பிரிவினருக்கு ₹1,700).

Mamata Banerjee
  • இளைஞர்களுடன்: 'பங்களார் யுவ-சக்தி' திட்டத்தின் கீழ் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹1,500 நிதியுதவி.
  • விவசாய பட்ஜெட்: விவசாயிகளுக்காக ₹30,000 கோடியில் தனி பட்ஜெட் மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிதியுதவி.
  • உறுதியான இருப்பிடம்: வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான 'பக்கா' (சிமெண்ட்) வீடு உறுதி செய்யப்படும்.
  • வீடு தோறும் குடிநீர்: அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்.
  • சுகாதார உரிமை: ஒவ்வொரு வார்டிலும்/நகரத்திலும் வீட்டு வாசலுக்கே மருத்துவ வசதி அளிக்கும் 'துவாரே சிகிச்சை' முகாம்கள்.
  • கல்விச் செல்வம்: அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
  • கிழக்கின் வர்த்தக மையம்: உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்கள் மற்றும் வர்த்தக மையங்களை உருவாக்கி, வங்காளத்தை கிழக்கு இந்தியாவின் வர்த்தக வாசலாக மாற்றுதல்.
  • முதியோர் பாதுகாப்பு: தடையற்ற முதியோர் ஓய்வூதியம் மற்றும் அதன் வரம்பை விரிவுபடுத்துதல்.
  • நிர்வாக வசதி: 7 புதிய மாவட்டங்களை உருவாக்குதல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைத்தல்.

ஆகிய வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி கொடுத்திருக்கிறார். இந்த வாக்குறுதிகள் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+