ஹலோ எக்ஸ்கியூஸ்மி! குட்காவை துப்பணும்.. ஜன்னலை திறங்கனு கேட்ட பயணி.. "ஸ்டெர்ன்னான" விமான பணிப்பெண்
டெல்லி: விமானத்தில் பறந்து கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென விமான பணிப்பெண்ணை அழைத்து "தான் எச்சில் துப்ப வேண்டும், எனவே விமானத்தின் ஜன்னலை திறந்துவிடுங்கள் என கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தில் முதல் முதலில் பயணம் செய்தால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். ஜன்னல் சீட்டு வேண்டும் என சிலர் சொல்வார்கள். சிலர் சீட் பெல்ட் போட்டுக் கொள்ள தெரியாமல் விமான பணிப்பெண்ணை அழைப்பார்கள்.
அது போல் இன்னும் சிலர் அங்கு வெல்கம் டிரிங் கொடுத்துவிட்டு, வெல்கம் பிரேக்பாஸ்ட் கொடுத்தால் இட்லி, தோசை எல்லாம் கேட்பார்கள். அது போல் பிளைட் டேக் ஆப் ஆகும் போது வரும் சப்தத்தை கேட்டாலே சிலர் சாமி கும்பிடுவர். இப்படி காமெடியான விஷயங்கள் நடக்கும்.

விமான ஊழியர்
இந்த நிலையில் விமானத்தில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது, தவறாக நடத்தல், சக பயணி மீது சிறுநீர் கழித்தல், அவசர வழியைத் திறத்தல் போன்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு விமானத்தில் ஒரு பயணி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணி கேட்ட கேள்வி
அதாவது விமானத்தில் பயணி ஒருவர் ஏறி உட்கார்ந்ததும் விமானம் புறப்படத் தயாரானது. அப்போது அவர் விமான பணிப்பெண்ணை அழைத்தார். அவர் வந்தவுடன் அந்த பயணி குட்கா போட்டுள்ளேன். எச்சில் துப்ப வேண்டும். எனவே கொஞ்சம் ஜன்னல் கதவை திறந்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

விமான பணிப் பெண் பதில்
இதை கேட்டதும் அந்த விமானப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு அந்த விமான பணிப்பெண் என்ன பதில் சொன்னார் என்பதை வீடியோவாக எடுத்த அந்த பயணி அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பயணி இதை சீரியஸாக கேட்கவில்லை என்றும் நகைச்சுவைக்காக பிராங்க் செய்ததாகவும் கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இன்டிகோ விமானம்
இந்த சம்பவம் இன்டிகோ விமானத்தில்தான் நடந்துள்ளது. கோவிந்த் ஷர்மா என்ற பயணி கையில் குட்காவை கசக்குவது போல் செய்கை செய்து அங்கு வந்த விமான ஊழியரிடம், "எக்ஸ்கியூஸ்மி குட்கா சாப்பிட்டிருக்கேன், எச்சில் துப்ப வேண்டும், ஜன்னலைத் திறக்க முடியுமா என அந்த பயணி கேட்டவுடன் அதற்கு அந்த விமான ஊழியர் சிரித்துவிட்டு சென்றார்.

நியூயார்க் விமானம்
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க் டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி ஒருவர் மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்தார். இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் உடனடியாக ஆக்ஷன் எடுக்காத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ 30 லட்சம் அபராதமும் அந்த ஆசாமிக்கு 4 மாதங்கள் விமானத்தில் பறக்கத் தடையும் பைலட் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது போல் அந்த நபர் பணியாற்றி வந்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கியது. விமான நிறுவனத்தின் நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட மூதாட்டி ஏர் இந்தியா குரூப் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதி விவரங்களை தெரிவித்த பிறகுதான் நடந்தது.












Click it and Unblock the Notifications