கடைக்கார் கடைக்கார்.. "அதை" மட்டும் செஞ்சுராதீங்க.. "டேக் 200"... கெஞ்சிய புருஷர்!
டெல்லி: இது ஒரு செம காமெடி கதை.. பல பேருக்கு இது யூஸ் ஆகவும் கூடும். வாங்க உள்ளே போய் வேடிக்கை பார்ப்போம்.
எந்த ஊர்னு தெரியலை.. யார்னும் தெரியலை.. டிக்டாக் தளத்தில் இந்த மேட்டரைப் போட்டுள்ளனர். கதை இதுதான்...
செல்போன் ரிப்பேர் செய்யும் கடைக்காரரிடம் தன்னுடைய செல்போனை சரி செய்து தருமாறு கூறி ஒருவர் அவருடைய செல்போனைக் கொடுத்துள்ளார்.

உடைஞ்சு போன போன்
அந்த செல்போன் ஸ்க்ரீன் பல கீறல்களுடன் மேலிருந்து கீழ் வரை உடைந்திருந்தது. எனவே அதை சரி செய்வதற்காக செல்போனை திறந்துப் பார்த்தபோது கடைக்காரர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அதனுள் கொஞ்சம் பணமும் ஒரு தாளில் சிறு குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

தேங்க்ஸ்
இவை இரண்டும் அழகாக மடிக்கப்பட்டு செல்போனுக்குள் பொருந்தி இருக்கும் படி வைக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பில் "இதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு தயவு செய்து இந்த செல்போனை ரிப்பேர் செய்து தராதீர்கள். என் மனைவி என்னை கொன்றே விடுவாள். தேங்க்ஸ்" என்று எழுதி இருந்தார்.

10,000 கமெண்ட்ஸ்
இதைப் பார்த்த கடைக்காரர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். உடனே இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் "தங்கள் கேர்ள் ஃப்ரண்ட்ஸை ஏமாற்றும் வாடிக்கையாளர்களை நான் ரொம்ப நேசிக்கிறேன்". என்று கூறி கலாய்த்து சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவிற்கு 12.3 மில்லியன் வியூக்களும் 10,000 கமெண்ட்டுகளும் வந்துள்ளதாக கூறுகிறார்.

காரணம்
அந்த கமெண்ட்டுகளில் ஒருவர் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்போனை சரி செய்து விட்டு அந்த வாடிக்கையாளர் ஏன் அவ்வளவு பதட்டப்பட்டார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். மற்றொருவரோ அந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்போனை சரி செய்து விட்டு, அந்த சிறு குறிப்பை அவர் மனைவியிடம் காணபித்து மேலும் கொஞ்சம் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருப்பி கொடுங்கள்
மேலும் ஒருவர் நீங்கள் அந்த ரிப்பேரை சரிசெய்து அதில் உள்ள தேவையில்லாதவற்றை நீக்கி விட்டு திருப்பி கொடுங்கள் என்று கூறி இருந்தார். இவ்வாறான பல்வேறு கமெண்ட்டுகள் குவிந்து விட்டன அந்த போஸ்ட்டுக்கு.. பயபுள்ளை அப்படி என்ன தப்பு செஞ்சுச்சுன்னு தெரியலையே!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications