"ஒரு டெட் பாடி இருக்கு.." வாடகை கார் டிரைவருக்கு.. ஷாக் கொடுத்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்
டெல்லி: பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது உடலை ஓலா காரில் கொண்டு செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சொத்துக்கு ஆசைப்பட்டு பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் நடந்தே வருகிறது.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது கான்பூரில் நடந்துள்ளது. குடும்ப சொத்திற்கு ஆசைப்பட்டு பெண் ஒருவரை அவரது மைத்துனரே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இருப்பினும், அவரை போலீசார் கடைசியில் பிடித்துவிட்டனர்.

என்ன நடந்தது: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் ஒலா காரை புக் செய்து அதன் மூலம் உடலை அப்புறப்படுத்த முயன்ற ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உடலைச் சாக்குப் பையில் சுற்றி அதை காரில் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அதில் ரத்த கறை இருந்ததால் கார் ஓட்டுநர் உடனடியாக இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்காக அந்த பெண்ணை இந்த கும்பல் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அந்த பெண் குசும் குமாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். கொலையாளிகள் இந்த பெண்ணின் உறவினர்கள் தானாம். மூதாதையரின் சொத்துகளை அடையத் திட்டம் போட்ட அந்த கும்பல், அதற்குத் தடையாக இருந்த இந்த பெண்ணை தீர்த்துக் கட்டியுள்ளனர்.
கசிந்த ரத்தம்: இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மைத்துனர் மற்றும் அவரது உறவினர் இருவரும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர்கள் இருவரும் நொய்டாவில் இருந்து கான்பூரில் உள்ள மஹராஜ்பூருக்கு ஓலா காரை புக் செய்துள்ளனர். இந்த காரில் வைத்து உடலை அப்புறப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த பெண்ணின் உடலைச் சாக்கில் போட்டு எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அப்போது அந்த சாக்கு பையில் இருந்த ரத்தம் கசிந்ததை டிரைவர் கவனித்துள்ளார்.
இதனால் காரை எடுக்க மாட்டேன் என்று அந்த டிரைவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அவர்கள், டிரைவர் ஆபாசமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய டிரைவர், நெடுஞ்சாலையில் இருந்த போலீசாரிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் விசாரணையை போலீசார் ஆரம்பித்துள்ளனர். அப்போது தான் இந்த ஷாக் சம்பவம் தெரிய வந்துள்ளது.
போலீஸ் விசாரணை: இதில் தொடர்புடைய அனைவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பரம்பரை சொத்திற்காக குசும் குமாரியை கொலை செய்ய அவரது மைத்துனர் திட்டமிட்டுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளது. உறவினர் ஒருவருடன் இணைந்து குசும் சுந்தரியை கொலை செய்துள்ளார். ஏற்கனவே பிளான் போட்டபடி அவரது உடலையும் அப்புறப்படுத்தக் காரை புக் செய்துள்ளார்.
இருப்பினும், அந்த ஓலா கார் ஓட்டுநர் மனோஜ் ர்தத கறையைப் பார்த்து போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சதூர்யமாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த அந்த ஓட்டுநரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications