பைவ் ஸ்டார் ஓட்டலுக்கே பட்டை நாமம்.. 2 வருடம் தங்கி ரூ. 58 லட்சம் பில்.. விபூதி அடித்த விருந்தாளி
டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலில் ஒருவர் பணமே கட்டாமல் இரண்டு வருடம் தங்கியிருந்துவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார்.. இது எப்படி திமிங்கலம் என்று கேட்பது தெரிகிறது. மொத்தம் 58 லட்சம் ரூபாய் ஏமாற்றி இருக்கிறார் அந்த நபர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆனாலே எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஒருவர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இரண்டு வருடம் தங்கியிருந்துள்ளார். சுகபோகமாக வாழ்ந்து மகிழ்ந்துள்ளார். ஆனால் பணமே கொடுக்கவில்லை. இது எப்படி நடந்திருக்கிறது என்பதை கேட்டு ஓட்டல் நிர்வாகமே ஆடிபோயிருக்கிறது.

ஏனெனில் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். தினமும் யார் வருகிறார்கள், யார் தங்குகிறார்கள், எத்தனை நாள் தங்குகிறார்கள். அவர்கள் தங்கும் அறையின் வாடகை எவ்வளவு , அவர்கள் பணத்தை எப்படி செலுத்தினார்கள்.
தங்கும் நாட்களில் என்ன சாப்பிட்டார்கள், எத்தனை மணிக்கு ஆர்டர்கள் செய்தார்கள் என்பது வரைக்கும் கணினியில் தெளிவாக இருக்கும். எனவே ஒருவர் பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கி, சாப்பிட்டு, சுக போக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு எஸ்கேப் ஆக முடியாது. ஆனால் ஒரு பைசாக கூட கொடுக்காமல் டெல்லியில் எஸ்கேப் ஆகி உள்ளார்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏரோசிட்டியில் உள்ள ரோஸேட் ஹவுஸ் என்ற பைவ் ஸ்டார் ஹோட்டல், டெல்லி விமான நிலைய காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்துள்ளது.
Bird Airports Hotel Private Limited என்ற நிறுவனம் நடத்தி வரும் ரோஸேட் ஹவுஸ் பைவ் ஸ்டார் ஓட்டல் சார்பாக வினோத் மல்ஹோத்ரா என்பவர் அளித்துள்ள புகாரில், தங்கள் ஓட்டலுக்கு கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அங்குஷ் தத்தா என்பவர் வந்தார் என்றும். அவர் சுமார் 603 நாட்கள் தங்கியிருந்தார் என்றும் இதற்கான பில் ₹58 லட்சம் ஆகும். ஆனால் அங்குஸ் தத்தா ஒரு பைசா கூட செலுத்தாமல் செக் அவுட் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்குஸ் தத்தாவை ஹோட்டலில் இத்தனை நாட்கள் தங்கி மோசடியில் ஈடுபட பிரேம் பிரகாஷ் என்ற ஊழியர் தான் அனுமதித்துள்ளார். அவர் தான் எங்கள் ஹோட்டலின் அலுவலகத் துறைத் தலைவர். அறைக் கட்டணங்களைத் தீர்மானிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.
அவர் தான் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களின் நிலுவைத் தொகையைக் கண்காணிக்கும் ஹோட்டல் சர்வரையும் கண்காணிப்பவர் ஆவார். அவர் தான் அங்குஸ் தத்தாவை ஹோட்டல் விதிமுறைகளை மீறி நீண்ட காலம் தங்க அனுமதித்துள்ளார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹோட்டல் நிர்வாகம் சார்பில் வினோத் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களின் வருகை மற்றும் புறப்பாடு, அதாவது செக் இன், செக் அவுட் டைம்களை பராமரிக்கும் கம்ப்யூட்டரில் பராமரிக்கும் பிரேம் பிரகாஷ் பணம் பெற்றுக்கொண்டு இப்படி மோசடியில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பாரோ என்றும் ஓட்டல் நிர்வாகத்திற்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் அந்த ஊழியரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications