தண்ணீர் குடிக்க தவித்த பூனை.. கையை கப்பாக்கிய நபர்.. ஆனந்தமாக தண்ணீர் குடித்த "புஸ்ஸிகேட்"- வீடியோ
டெல்லி: குழாய் இருந்தும் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்த பூனைக்கு உதவிய நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியா முழுவதும் ஆங்காங்கே வெயிலும் மழையும் மாறி மாறி வருகிறது. அது போல் வெளிநாடுகளிலும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப வெயிலும் மழையும் மாறி மாறி இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தால் விலங்குகள், பறவைகள் தண்ணீர் தாகத்தைத் தீர்த்து கொள்ள தண்ணீரை தேடி அலையும் நிலையுள்ளது. இந்த நிலையில் இணையதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

ஐஎஃப்எஸ் அதிகாரி
ஒரு ஐஎஃப்எஸ் அதிகாரி பதிவிட்ட 15 வினாடிகள் வீடியோ இதுவரை 5000 பேரால் பார்க்கப்பட்டுவிட்டது. சிறிய விஷயங்களில்தான் உண்மையான மகிழ்ச்சியை காணமுடியும். பொது குழாய் மூலம் பூனை ஒன்று தண்ணீர் குடிக்க உதவிய நபர் மகிழ்ச்சியாக உதவுகிறார் என அந்த ஐஎஃப்எஸ் அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

தண்ணீர்
அவர் இணைத்துள்ள வீடியோவில் தாகத்துடன் ஒரு பூனை வருகிறது. அங்குள்ள குழாயைப் பார்த்தபடி வருகிறது. ஆனால் அதனால் தண்ணீரை திறந்து குடிக்கமுடியவில்லை. இதை பார்த்த ஒரு நபர் கைகளை கோப்பையாக்கி தண்ணீரை பிடிக்கிறார்.

பூனையின் வாய்
பின்னர் குவித்தபடி கைகளை பூனையின் வாய் அருகே கொண்டு செல்கிறார். பூனையும் அந்த தண்ணீரை குடிக்கிறது. மீண்டும் ஒரு முறை இதே போல் செய்து அதன் தாகத்தை தீர்த்து வைக்கிறார். மிகவும் இனிமையான செயல் என்றும் மனிதநேயத்தை காண முடிகிறது என்றும் ஏராளமானோர் கமென்ட் போட்டுள்ளனர்.

கருணை
மிகவும் அழகான தருணம், கருணையுள்ளம் கொண்ட நபர் என அந்த ட்வீட்டுக்கு பலர் ரிப்ளை அனுப்பியுள்ளார்கள். இந்த வீடியோ ட்விட்டரில் டிரென்டிங்கில் உள்ளது. அதே நேரம் இந்த பூனைக்கு அவர் தண்ணீர் கொடுக்கும் முறையை காணும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
