Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடச்ச்சீ.. மெட்ரோ ரயிலில், அதுவும் "ஆபாச படம்" பார்த்து கொண்டே.. அலறி ஓடிய பெண்கள்..பாருங்க கொடுமையை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர வைத்துள்ளது.. இது தொடர்பான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. என்ன நடந்தது தலைநகரில்?
டெல்லியை பொறுத்தவரை, நவநாகரீகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பெரும்பாலான இளைய தலைமுறையினர் மார்டனாக இருக்கிறார்கள்.

இதில் பெண்கள், தங்கள் ஆடை அலங்காரங்களில் சற்று கூடுதல் கவனத்தையே செலுத்தி வருகிறார்கள்.. ஆனால், இது சமீபகாலமாகவே எல்லைமீறிவிட்டதாக கருதப்படுகிறது.

குட்டை பாவாடை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோ ரயிலின் இளம்பெண் ஒருவர் அரைகுறையாக டிரஸ் செய்துகொண்டு பயணம் செய்தார்.. அந்த டிரஸ் பார்ப்பதற்கே படுமோசமாக இருந்தது.. நீச்சல் உடை அணிந்தபடியே, மெட்ரோவில் ஏறி உட்கார்ந்திருந்தார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாருமே அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மெட்ரோவில், அதுவும் தலைநகரில், இப்படி ஒரு கோலமா? என்று அதிர்ந்து கேட்டார்கள் இணையவாசிகள்..

man masturbating on delhi metro and women panel chief seeks action against man masturbating on metro

நீச்சல் டிரஸ்: இதற்கு பிறகு, மெட்ரோ சார்பில் ஒரு அறிக்கை வெளியானது.. "டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் சமூக அந்தஸ்து பேணும் வகையில் கண்ணியமான உடைகளை அணிந்து வருவார்கள் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் எதிர்பார்க்கிறது. இது போன்ற ஆடைகளை அணிந்து சக பயணிகளின் உணர்வுகளை அவமதிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி, பிரிவு 59 இன் கீழ் கண்ணியமற்ற அநாகரீகமாக ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும்.. தான் விரும்பிய ஆடைகளை அணிவது என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும், பொது போக்குவரத்தில் இது போன்ற அநாகரிகமாக ஆடை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இன்னொரு கன்றாவி இதே டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்துள்ளது..

ஆபாச வீடியோ: இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.. நேற்றைய தினம், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் வழக்கம்போல் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர், திடீரென ஆபாச செய்கைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.. தன்னுடைய செல்போனில் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டிருந்தவர், டக்கென சுயஇன்பத்தில் ஈடுபட துவங்கிவிட்டார்..

ஆபாச படம்: பட்டப்பகலில், சக பயணிகள் அத்தனை பேர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்களே? என்ற கூச்சம் கூட இல்லாமல், அந்த ஆபாச வீடியோவை பார்த்துக் கொண்டே இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். இதை பார்த்த சில பெண் பயணிகள், அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து கொண்டு, தங்கள் இருக்கைகளை விட்டு வேறு இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டனர்.. இந்த காட்சியை, அதே மெட்ரோவில் பயணித்த இன்னொரு பயணி வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.. இதையடுத்து, அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.. இளைஞர் அந்தரங்க செயலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்ட டெல்லி மெட்ரோ நிறுவனமும், இன்னொரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.. அதில், "பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட DMRC (டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்) மெட்ரோவில் உள்ள மற்றவர்கள் இதுபோன்ற விஷயங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

man masturbating on delhi metro and women panel chief seeks action against man masturbating on metro

ஹெல்ப்லைன் : மெட்ரோவில் பயணிக்கும்போது பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்ற பயணிகள் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய நடத்தைகளைக் கண்டால், அவர்கள் உடனடியாக டிஎம்ஆர்சி ஹெல்ப்லைனுக்கு காரிடார், ஸ்டேஷன், நேரம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்" என்று டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் மீது, பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

மகளிர் ஆணையம்: ஆனால், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்... அதில், "டெல்லி மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவை பார்த்தேன். அது மிகவும் அறுவறுப்பாக இருக்கிறது. இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட நபர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்" என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+