டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது டூவீலருக்கு ஃபைன் கட்டணுமா.. முடியாது.. தீவைத்து கொளுத்திய இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு

ஃபைன் கேட்டதால் டூவீலரை இளைஞர் கொளுத்திவிட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : man sets bike after being issued challan for drunk and drive case

    டெல்லி: "என்னது.. டூவீலருக்கு ஃபைன் கட்டணுமா.. முடியாது" என்று சொல்லி, அந்த பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கை கொளுத்திவிட்டார் போதை இளைஞர்! இதனால் நடுரோட்டில் பைக் தீப்பற்றி கருகியது!

    டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனால் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சாலைகளில் நின்று, வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து சோதித்து வருகிறார்கள். விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட்ஃபைன் போடுகிறார்கள்

    Man sets bike after being issued challan for Drunk and Drive case

    அதன்படி, நேத்து ராத்திரி ஷேக் சராய் என்ற பகுதியில், ராகேஷ் என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். வரும்போதே அந்த பைக் ஆடிக் கொண்டே வந்தது. ராகேஷ் புல் போதையில் இருந்தார். அதனால் அவரை நிறுத்தி குடிபோதையில் இருந்ததை டிராபிக் போலீசார் உறுதி செய்தனர் .

    ஆர்சி புக் கேட்டால், அதுவும் அவரிடம் இல்லை. அதனால் ரூ.25 ஆயிரம் போலீசார் ஃபைன் விதித்தனர். ஏற்கனவே போதையில் இருந்த ராகேஷ், "25 ஆயிரம் ஃபைனா, என்னால முடியாது" என்று சொல்லிவிட்டு, பைக்கில் இருந்த பெட்ரோல் டேங்கில் நெருப்பை கொளுத்தி போட்டுவிட்டார்.

    இதனால் நடுரோட்டிலேயே பைக் குபுகுபுவென எரிய தொடங்கியது. இதை பார்த்த பொதுமக்கள், அங்கிருந்த டிராபிக் போலீசார் அதிர்ச்சியானார்கள். பைக்கில் நெருப்பை கொளுத்திய ராகேஷ், போலீசாருடன் சண்டையும் போட ஆரம்பித்துவிட்டார்.

    இதையடுத்து, தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர். ஆனாலும் பைக் கருகிபோனது. ஃபைன் கேட்டதால், ஆத்திரத்தில் சொந்த பைக்கையே கொளுத்திய இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை தந்துள்ளது.

    English summary
    Young Man Set s Two Wheeler because of challaned for drunk and driving case in Delhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X