சத்தமே இல்லை.. சைலெண்டாக சடைக்குள் புகுந்த நாகம்..! பதறி துடித்த நபர்.. உறைய வைக்கும் வீடியோ
டெல்லி: வயல், தோட்டம் அல்லது பார்க் போன்ற திறந்த வெளியில் தூங்குவது நன்றாக இருந்தாலும் கூட அதனால் எந்தளவுக்கு மோசமான பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
பொதுவாகவே வயல், தோட்டம் போன்ற திறந்தவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள், வேலை செய்த களைப்பில் கொஞ்ச நேரம் அங்கேயே தூங்கிவிடுவார்கள். மரத்தின் நிழல், சுற்றிலும் இயற்கையை ரசித்தபடி இவர்கள் அப்படியே தூங்கிவிடுவார்கள்.

இதுபோன்ற இடங்களைப் பார்த்தால் நமக்கே கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் எனத் தோன்றும். அப்படியிருக்கும் போது அதிகாலை முதல் மாலை வரை கடுமையாக வேலை செய்யும் இவர்களுக்குத் தோன்றாதா என்ன.
பாம்பு: இருப்பினும், இப்படி அமைதியாகக் குட்டி தூக்கத்தைப் போடுவதும் கூட நமக்கு எதிராக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அப்படித்தான் மரணத்திற்கு மிக அருகில் சென்ற ஒருவர் எப்படி அதில் இருந்து எஸ்கேப் ஆனார் என்பது குறித்த தகவல்களை இதில் நாம் பார்க்கலாம்.
இந்த வீடியோவை பார்க்கும் எந்தவொரு நபருக்கும் நிச்சயம் இதயத் துடிப்பு எகிறிவிடும். இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்ற போதிலும், அந்த நபர் பத்திரமாக இருக்க வேண்டும் என்றே நாம் பிரார்த்தனை செய்வோம். அந்தளவுக்கு இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் திக்திக் என்றே இருக்கிறது.
என்ன நடந்தது: அதாவது இதில் வயல்வெளியில் தூங்கிய இளைஞனின் சட்டையில் திடீரென நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதை அங்கிருந்த சிலர் வெளியே எடுக்க முயல்வதையே இந்த வீடியோ காட்டுகிறது. அன்றைய தினம் வேலைக்கு நடுவே இந்த இளைஞர் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து சற்று நேரம் பிரேக் எடுத்துள்ளார். அந்த நேரத்தில் தான் அவரது சட்டைக்குள் நைசாக இந்த பாம்பு உள்ளே சென்றுவிட்டது. அது பாம்பு வெளியே வர முயல்வதே இந்த வீடியோவில் இருக்கிறது.
இந்த வீடியோ நிஜமாகவே நமது இதயத் துடிப்பை எகிற வைப்பதாக இருக்கிறது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் இளைஞர் ஒருவர் மிகவும் பதற்றத்துடன் இருக்கிறார். அவரது சட்டைக்குள் பாம்பு இருக்கும் நிலையில், அது உள்ளே மெல்ல நகர்ந்தாலும் இது இவருக்கு மிகப் பெரிய அச்சத்தைக் கொடுக்கிறது. அந்த பாம்பு உள்ளே இருந்த நிலையில், பட்டனை திறந்து பார்க்கிறார்கள். மிகப் பெரிய பாம்பு ஒன்று உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறது.
ஷாக் சம்பவம்: வேகமாக எடுத்தால் எங்கே அது கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மெல்ல மெல்ல ஒவ்வொரு பட்டனாக வெளியே எடுக்கிறார்கள், அந்த பாம்பு மெல்லக் கீழே விழுகிறது. அப்போதும் கூட அதன் வால் பகுதி தான் முதலில் விழுந்தது. அதன் தலை பகுதி இன்னுமே உள்ளே தான் இருந்தது. இதனால் அந்த நபர் ரொம்பவே பதறிவிட்டார். கடைசியில் ஒரு வழியாக அந்த பாம்பாகவே வெளியே வந்து அப்படியே தோட்டத்திற்குள் சென்றுவிட்டது.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. அந்த பாம்பு யாரையும் கடிக்காமல் அப்படியே அங்கிருந்து அமைதியாக நகர்ந்து சென்றுவிடுகிறது. பொதுவெளியில் தூங்குவது நன்றாக இருக்கும் என்ற போதிலும் அது எந்தளவுக்கு ஒரு மோசமான ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications