மணிப்பூர் கொடூரம்- நாடாளுமன்ற வளாகத்தில் 26 கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மாஸ் போராட்டம்!
டெல்லி: மணிப்பூர் வன்முறைகளை ஒடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியும் 26 எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடருகின்றன. மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநிலம் சென்று முகாமிட்டிருந்தார். மணிப்பூரில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு சார்பாக அமித்ஷா மேற்கொண்டிருந்தார். மேலும் அமைதி குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
மணிப்பூர் வன்முறைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை; மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 2 சபைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பாக 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக அனைத்து எம்பிக்களும் இன்று கண்டன போராட்டம் நடத்தினர். லோக்சபா தேர்தலுக்கு 26 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்தில் பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணி எம்பிக்கள் சார்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் முதலாவது போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தின் போது மணிப்பூர் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications