நீங்களா தேச பக்தர்.. தேசத்துரோகிகள்.. இந்தியாவை இப்படி கொன்றுவிட்டீர்களே.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ராகுல் காந்தி இன்று பேசினார். மணிப்பூர் வன்முறை பற்றி ராகுல் காந்தி கடுமையாக பாஜவினரை தாக்கி பேசினார். அப்போது அவர், ‛‛நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள். மணிப்பூர் மூலம் பாரதத்தாயை கொலை செய்துவீட்டிர்கள்'' என கூறியதால் லோக்சபாவில் கொந்தளிப்பானது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று 2வது நாளாக விவாதம் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே அதானி பெயரை உச்சரித்து அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைக்கிறார். நான் பேசும்போது மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் உண்மையில் மணிப்பூரில் எதுவுமே இல்லை. நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள்.
மணிப்பூர் கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டது. மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீங்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள். இந்திய ராணுவத்தால் அங்கு ஒரே நாளில் அமைதியை கொண்டு வர முடியும். ஆனால் நீங்கள் அதனை செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் குரலை கேட்கவில்லை என்றால் அவர் யாருடைய குரலை கேட்பார்'' என ஆக்ரோஷமானார்.
இதற்கு மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் ராகுல் காந்தி பின்வாங்கவில்லை தொடர்ந்து பேசி அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications