“ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்”.. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்! யார் இவர்?
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். 10 ஆண்டுகள் இந்திய பிரதமராகவும், அதற்கு முன்னர் நிதி அமைச்சராகவும், திட்டக்குழு துணைத் தலைவராகவும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் மன்மோகன் சிங். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் என்றால் மிகையில்லை.
உலக நாடுகள் போற்றும் பொருளாதார வல்லுநராகத் திகழ்ந்த மன்மோகன் சிங், இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நிதித் துறை செயலர், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவர் போன்ற பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். பொருளாதாரத்தில் புலியான மன்மோகன் சிங், இந்தியா மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த காலகட்டத்தில், நரசிம்மராவ் அமைச்சரவையில் முதன் முதலில் நிதி அமைச்சர் ஆனார்.

மன்மோகன் சிங் வாழ்க்கை
1932 ஆம் ஆண்டு, மேற்கு பஞ்சாபில் உள்ள கா என்னும் ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங். இந்த ஊர் தற்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரிஸ்டருக்கு குடிப்பெயர்ந்தது. இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் படித்தார். பஞ்சாப் பல்கலைக்கழகம், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உயர் கல்வி கற்ற மன்மோகன் சிங், தொடர்ந்து, பொருளாதாரத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, அதில் முனைவர் பட்டம் பெற்றார்.
1971 ஆம் ஆண்டு இந்திய வர்த்தக அமைச்சகத்தின் ஆலோசகராக அரசுப் பணியில் சேர்ந்தார். அடுத்த ஒரே ஆண்டிலேயே அவருக்கு அடுத்த முக்கியப் பதவி கிடைத்தது. 1972ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார் மன்மோகன் சிங்.
ரிசர்வ் வங்கி கவர்னர்
1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் 1985 முதல் 1987 வரை திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர். 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட போது அந்நியச் செலாவணி பற்றாக்குறை போன்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவித்தது.
நிதி அமைச்சர்
அப்போது தான் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங், நிதி அமைச்சராக பணியாற்றினார். முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகி, அமைச்சரவையில் தொடர்ந்தார். தேர்ந்த பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் ஆரம்பத்தில் பெரும்பங்கு வகித்தார். பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதன் வாயிலாக இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் மன்மோகன்.
சிறந்த நிதி அமைச்சருக்கான ஆசியா மணி அவார்ட் விருதை 1993, 1994 ஆகிய ஆண்டுகளிலும், 'யூரோ மணி அவார்ட்' விருதை 1993ஆம் ஆண்டிலும் பெற்றார் மன்மோகன் சிங். இந்திய அரசின் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் மன்மோகன் சிங்.
பிரதமர் மன்மோகன் சிங்
2004 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்ததால், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், “ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என வர்ணிக்கப்படுகிறார். அதன்பிறகு 10 ஆண்டுகள் பிரதமராகத் தொடர்ந்தார் சிங்.
2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்து வழிநடத்தினார் மன்மோகன் சிங். பிரதமராக பொறுப்பேற்றதும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். தற்போது 92 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மன்மோகன் சிங் காலமானார்
அவ்வப்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்தான், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் காலமாகியுள்ளார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். இதை தொடர்ந்து, 5 முறை அசாமில் இருந்து மக்களவை எம்.பியாக தேர்வானார் மன்மோகன் சிங். இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மக்களவை எம்.பி யாக தேர்வாகி இருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications