Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manmohan Singh: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை.. முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் இன்று 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. குடும்ப முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ராணுவ, முப்படை தளபதியினர் மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் உடலுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து யமுனை நதிக்கரை கொண்டு வரப்பட்டு மதியம் 1 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.

manmohan singh congress

மன்மோகன் சிங் காலமானார்

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாக இருந்தவர் மன்மோகன் சிங். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டு பிரதமராக பதவி வகித்த இவர், அதன்பிறகு ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். 92 வயதான மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் தான் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 9.51 மணி அளவில் காலமானார்.

manmohan singh congress politics

7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்

இதனையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மன்மோகன் சிங்கின் உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை முதலே பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களும் மலர் வளையம் வைத்து மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மன்மோகன சிங்கின் மறைவுக்காக வருகிற 1 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

manmohan singh congress politics

மன்மோகன் சிங் இறுதி ஊர்வலம்

இந்த 7 நாட்களில் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்றும், இந்தியா முழுவதிலும், வெளிநாட்டில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு மன்மோகன் சிங்கின் உடல் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

manmohan singh congress politics

அங்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உடல் வைக்கப்பட்டது. மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு

இந்த ஊர்வலம் காலை 11.30 மணியளவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்தது. மன்மோகன் சிங் குடும்பத்தினரும் அங்கு வந்திருந்தனர். தொடர்ந்து மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. ராணுவ அதிகாரிகள், முப்படை தளபதிகள் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செய்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

manmohan singh congress politics

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினர் வெளிநாட்டு தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி முறைப்படி அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்டது. தொடந்து மன்மோகன் சிங் குடும்பத்தினரின் ஆசைப்படி, அவரது இறுதிச்சடங்கு நடந்தது.

உடல் தகனம் செய்யப்பட்டது

மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் இறுதிச்சடங்கு சம்பிரதாயங்களை செய்தார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில் இருந்தனர். மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், முப்படை தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோரும் இருந்தனர். குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+