ஜெயலலிதாவை மறக்கவே முடியாது.. சென்னை பொங்கல் விருந்து சுவாரசியத்தை ‛மன் கி பாத்'தில் பகிர்ந்த மோடி
டெல்லி: ‛‛நம் நாட்டில் உன்னதமான செயல்களை செய்தவர்கள் என்றும் மக்களின் இதயங்களில் வாழ்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24ம் தேதி அவரது பிறந்தநாள். . அவரது தேசபக்தி உணர்வு மிக உயர்ந்ததாக இருந்தது. ஜெயலலிதாவை சந்தித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது. 2002 மற்றும் 2013ம் ஆண்டுகளில் குஜராத்தில் நடைபெற்ற எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார். தனிப்பட்ட முறையில் அவர் காட்டிய அன்பும், அக்கறைக்கும் மீண்டும் ஒருமுறை எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்'' என்ற பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.
பிரதமர் மோடி இன்று ‛மன் கி பாத்' நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாடினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வர உள்ளது.

இந்நிலையில் தான் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி புகழ்ந்ததோடு, இருவருக்கும் இடையேயான சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: ‛‛நமது நாட்டில், சமூக நலனுக்காக உழைத்தவர்கள், பொதுமக்களை முன்னிறுத்தி உன்னதமான செயல்களை செய்தவர்கள் என்றும் மக்களின் இதயங்களில் வாழ்கிறார்கள். ஜெயலலிதா அத்தகைய மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர்.
பிப்ரவரி 24ம் தேதி அவரது பிறந்தநாள்.
தமிழ்நாட்டிற்கு நான் செல்லும்போதெல்லாம் அவர் மீதான ஆழமான அன்பை இன்றும் உணர்கிறேன். ஜெயலலிதா என்ற பெயரைக் கேட்டதுமே தமிழ்நாட்டு மக்களின் முகங்களில் ஒளி பரவுகிறது. நமது நாட்டுடன் குறிப்பாக கலாச்சார பாரம்பரியத்துடன் அவருக்கு சிறப்பான தொடர்பு இருந்தது.
ஆட்சியில் பல பாராட்டத்தக்க நடவடிக்கைகளை அவர் செய்திருந்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பேணுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது தேசபக்தி உணர்வு மிக உயர்ந்ததாக இருந்தது. ஜெயலலிதாவை சந்தித்த நினைவு இன்றும் பசுமையாக உள்ளது.
2002 மற்றும் 2013ம் ஆண்டுகளில் குஜராத்தில் நடைபெற்ற எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார்.
அவரது சிந்தனை மிகத் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன. இது அவரது மிகப் பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று. பல சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட முறையில் அவர் காட்டிய அன்பும், அக்கறைக்கும் மீண்டும் ஒருமுறை எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். மக்களுக்கான அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும். மக்களுக்கான அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும்'' என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications