Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட அவரே நேரில் வராரு.. ஊரே வியக்கும் ஆடை முதல் உலக பிரமுகர்கள் வரை.. ஆனந்த் அம்பானி திருமணம் படுஜோர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்னும் சில வாரங்களில் நடக்கும் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் அம்பானி. இவர் ரிலையன்ஸ் என்ற மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். திருபாய் அம்பானி விட்டுச் சென்ற சொத்துகளைப் பல மடங்கு உயர்த்தி காட்டியவர் முகேஷ் அம்பானி.

 Many prominent person including Bill Gates, Melinda Gates to attend Anant Ambani’s pre-wedding event

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானி கடந்த 1985இல் நீடா அம்பானியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி- இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும் ஆனந்த் அம்பானி என இளைய மகனும் உள்ளனர்.

கொண்டாட்டங்கள்: கடந்த 2018இல் மகள் முதலில் ஈஷாவுக்கு திருமணம் நடந்த நிலையில், மூத்த மகனான ஆகாஷ் அம்பானிக்கு 2019இல் திருமணம் நடந்தது. இந்தச் சூழலில் தான் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி குஜராத்தின் ராதிகா மெர்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களுக்குக் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கிடையே இப்போது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே இருவருக்கும் இடையே 'லகான் லக்வானு' என்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான 'லகான் லக்வானு' குஜராத்தில் கடந்த வாரம் நடந்தது.. 'லகான் லக்வானு' என்பது முதலில் ஒரு திருமண அழைப்பிதழை உருவாக்கி அதைக் கோயிலுக்கு அளிப்பதாகும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அழைப்பிதழ்களைத் தர ஆரம்பிப்பார்கள். கடந்த வாரம் நடந்த இந்த நிகழ்வில் ராதிகா மெர்சன்ட் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. பல நாட்களுக்கு அவரது ஆடையே டிரெண்டிங்கில் இருந்தது.

கேட்ஸ்: இதற்கிடையே அடுத்த மாதம் தொடக்கத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற உள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குறித்து வெறு சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த விழாவில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 Many prominent person including Bill Gates, Melinda Gates to attend Anant Ambani’s pre-wedding event

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் உட்பட பல சர்வதேச அளவில் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுமார் 1,000 விருந்தினர்களுக்கு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்திய அளவில் முக்கியமான நபர்கள் மட்டுமின்றி புகழ்பெற்ற உலகப் பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

விருந்தினர் பட்டியல்: இருப்பினும் விருந்தினர் பட்டியல் தொடர்பாக இதுவரை வேறு தகவல்களையும் அம்பானி குடும்பத்தினர் வெளியிடவில்லை. தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் வரும் மார்ச் 1 முதல் 3 வரை ஜாம்நகர் இல்லத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. கடந்தாண்டு ஜனவரி 19ஆம் தேதி மும்பையில் நடந்த கோல் தான விழாவில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இப்போது சுமார் ஓராண்டு கழித்து இருவருக்கும் இடையே திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடக்கிறது. இந்த ஜோடி வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+