திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது என்ன தெரியுமா.. அட.. இது லிஸ்ட்லயே இல்லையே!
டெல்லி: கூகுள் ஒரு தகவல் பெட்டகம். சுடு தண்ணீர் வைப்பது எப்படி என்பது முதல் சுட்டுக் கொல்வது எப்படி என்பது வரை இந்த தேடுபொறியில் தேடி விடை காணலாம்.
எந்த வார்த்தைக்காவது அர்த்தம் தெரியலையா கூகுளில் தட்டி தெரிந்து கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், முக்கிய நிகழ்ச்சிகள், என அத்தனையையும் வினாடியைவிட குறைந்த நேரத்தில் கூகுள் நமக்கு கூறுகிறது.
நிறைய உண்மையான தகவல்களை கூறிவருவதால் இந்த தேடுபொறியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் மனங்களை கவர கூகுள் உதவியை நாடியுள்ளார்களாம்.

குழப்பம்
என்ன குழப்பமாக இருக்கிறதா? புதிதாக திருமணமானவர்களுக்கு தங்கள் கணவன்மார்களை கவருவது எப்படி என்பது குறித்து அறிய விரும்புகிறார்கள். கவருவது என்றால் அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதுதான். இதை கணவரின் தாய், தந்தை, உடன்பிறந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று பணி நிமித்தமாகவும் பிரைவசியை தேடியும் கணவன், மனைவி மட்டும் தனிக்குடித்தனம் இருக்கிறார்கள்.

மனைவியர்கள்
இதனால்தான் மனைவியர்கள் கூகுள் எனும் பொக்கிஷத்தை நாடுகிறார்கள். கணவரை கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி என ஒரு பெண் தேடியுள்ளார். இது கூட பரவாயில்லை, குழந்தை பெற்றுக் கொள்ள சரியான நேரம் எது என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.

குடும்ப பொறுப்பு
திருமணம் முடிந்த பிறகு கணவர் வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்வது, கணவர் வீட்டில் தானும் ஒரு அங்கமாவது எப்படி, குடும்ப பொறுப்பை சுமப்பது எப்படி, திருமணத்திற்கு பிறகு பிசினஸை ரன் செய்வது எப்படி என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம். மேலும் கணவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் தேடியுள்ளனராம்.

ஆய்வுகள்
இந்த தகவல்கள் கூகுள் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக திருமணமான கணவர்களுக்கு ஒரு வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி அடுத்த 10 ஆண்டுகளில் திருமணம் செய்யும் பெண்கள் இதற்கென தனியாக கல்லூரியில் கோர்ஸ் உருவாக்க கோருவார்களோ! பொதுவாக மனைவி தங்களை எப்போதும் நிம்மதியாகவே இருக்க விடமாட்டார் என கணவன்மார்கள் புகார் கூறுவது உண்டு. ஆனால் இது லிஸ்ட்லேயே இல்லாததால் கணவன்மார்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications