டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுவரை இப்படி நடந்தது இல்லை.. ஒரு கார் கூட விற்பனை செய்ய முடியாத மாருதி சுசுகி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் நம்பர் ஒன் கார் விற்பனை நிறுவனமான, மாருதி சுசுகி, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரு மோசமான சாதனையை ஏப்ரல் மாதம் பதிவு செய்துள்ளது.

Recommended Video

    கொரோனாவால் 160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

    அதாவது, போன மாதத்தில், அந்த நிறுவனத்தின் ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. இந்த தகவலை அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

    Maruti Suzuki Reports Zero Sales In A Month For First Time Ever Amid Lockdown

    லாக்டவுன் உத்தரவை தொடர்ந்து, மாருதி சுசுகி, அனைத்து உற்பத்தி யூனிட்டையும் மூடிவிட்டது. மார்ச் மாதத்தில் மாருதி கார் விற்பனை 47.4% என்ற அளவில் இருந்தது.

    Maruti Suzuki Reports Zero Sales In A Month For First Time Ever Amid Lockdown

    மாருதி சுசுகி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 150,000 கார்களை உற்பத்தி செய்கிறது. எனவே, நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக உள்ளது. எனவே, ஒரு கார் கூட விற்பனை செய்யாத மோசமான நிலை ஏப்ரல் மாதம் மட்டும்தான், பதிவாகியுள்ளது.

    Maruti Suzuki Reports Zero Sales In A Month For First Time Ever Amid Lockdown

    அதேநேரம், 632 கார்களை முந்த்ரா துறைமுகத்திலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது மாருதி சுசுகி.

    "ஒரு காரின் அனைத்து உபகரணங்களும் தடையின்றி கிடைக்காவிட்டால் காரை தயாரிக்க முடியாது. எனவே, தொழிற்சாலையைத் தொடங்க யாராவது என்னிடம் சொன்னால், அது எனக்கு உதவாது. அந்த தொழிற்சாலையை உற்பத்திக்காக என்னால் தொடங்க முடியாது." என்று தெரிவித்தார், மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி.பார்கவா.

    English summary
    Maruti Suzuki India, the country's largest carmaker, on Friday reported zero domestic sales last month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X