Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமா? சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் ஓர் அலசல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் உயிரிழந்தனர். 3 பேர் கடுமையாக படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் கவனம் பெற்றிருக்கின்றன. இன்று டெல்லியில் நடந்த தாக்குதல், ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் தொடர்ச்சியா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

Jammu Kashmir Red Fort

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. ஆயுதம் ஏந்திய சுமார் 3 தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் அதிகம் இருந்த பகுதிக்கு வந்து, கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், தீவிரவாதிகளின் தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பல தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் பலியாகினர்.

இதற்கு முன்னர் கடந்த 2024ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ரியாசி பகுதியில், கட்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, பேருந்தை மறித்து தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் தீவிரவாத குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பக்தர்கள் பலியாகினர். 41 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் அமைப்பானது லஷ்கர்-ஏ-தொய்பாவின் கிளை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 1ம் தேதி கர்நாடகாவின் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், 9 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய என்ஐஏ, முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் என மூன்று பேர் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறியது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்த என்ஐஏ, கிரிப்டோ கரன்சி மூலம் இவர்கள் சதி செயலுக்கு நிதி திரட்டினார்கள் என்று கூறியிருக்கிறது.

அதற்கு முன்னர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி கொச்சியின் களமசேரியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 5 பேர் வரை உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+