காங்கிரஸுக்கு “ஜன கண மன”? கையில் இருந்த ரெண்டும் போச்சு.. மொத்தமும் பாஜக.. இந்த மேப்பை பாருங்க!
டெல்லி: கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற 30 சட்டமன்ற தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் பெர்ஃபாமன்ஸ் என்ன? எங்கெங்கு எல்லாம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் என்பதை விரிவாக பார்க்கலாம்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று மிசோரம் தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணைய முடிவுகளின் படி, பாஜக, 3 மாநிலங்களில் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி பாஜக மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியை அமைக்க உள்ளது. தெலுங்கானாவில், பிஆர்எஸ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது.

2019க்குப் பிறகு 30 தேர்தல்கள் : 2019ல் பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்த பிறகு, அதுவும் 303 தொகுதிகளில் வென்று அசுர பலத்தோடு மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய கையோடு, நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டத்தோடு ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்துக் களமிறங்கியது. 2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்துள்ளது.
இதில் 13 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. சிக்கிம், புதுச்சேரி, மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி இந்த 25ல் இமாச்சல பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
பாஜக ஆட்சி : 2019 அக்டோபரில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. 2019 சட்டசபைத் தேர்தலில் மகாராஷ்டிராவிலும் அதிக இடங்களைக் கைப்பற்றி, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் கூட்டணியில் ஏற்பட்ட முரண்களால், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க, பாஜகவைக் கழற்றி விட்டார் உத்தவ் தாக்கரே. எனினும் ஷிண்டே தலைமையில் அதிருப்தி அணியை உருவாக்கி, உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்து கடந்த ஆண்டு மீண்டும் பாஜக - ஷிண்டே அணி அரியணை ஏறியது.
2019ல் நடந்த ஜார்க்கண்ட் தேர்தலில் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சி மீதான கடும் எதிர்ப்பலையால் ஜார்க்கண்டில் ஆட்சியைப் பறிகொடுத்தது பாஜக. அதற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் டெல்லியில் ஆம் ஆத்மியிடம் தோல்வியைத் தழுவினாலும், பீகாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றது பாஜக. நிதிஷ் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு அக்கட்சி எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக திட்டமிட்டதால், பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு காங்கிரஸுடன் கைகோர்த்தார் நிதிஷ் குமார்.
வெற்றி மேல் வெற்றி : கடந்த 2021ல் நடந்த தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் அசாமில் மட்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமைத்த என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த ஐந்தில் பாஜக வெற்றி பெறாத 3 மாநிலங்களில் எங்குமே பாஜக முன்னரும் ஆட்சியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்தது ஆம் ஆத்மி கட்சி. இந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு தான் சரிவே தவிர, பாஜகவுக்கு ஏறுமுகம் தான்.
இமாச்சலில் காங்கிரஸ் : 2022 டிசம்பரில் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசம் என இரு மாநில தேர்தலில் குஜராத்தில் அமோக வெற்றியைப் பெற்றது பாஜக. 2023 பிப்ரவரியில் நடைபெற்ற 3 மாநில தேர்தலில் திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. மேகாலாயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில், வென்று, ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அங்கு முன்னர் பாஜக ஆட்சி இருந்து வந்த நிலையில், பாஜகவை அரியணையில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் 4 மாநில முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தெலுங்கானாவில் மட்டுமே ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது காங்கிரஸ்.
2 மாநிலங்களை பறிகொடுத்த காங்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த சூழலில், அதனையும் தற்போது பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக, சத்தீஸ்கரில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.
பாஜக இரண்டாவது முறையாக 2019ல் ஆட்சிக்கு வந்தபிறகு, இந்த 4 ஆண்டுகளில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்கள் எனப் பார்த்தால் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றி அரியணை ஏறியது காங்கிரஸ். அதன்பிறகு கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி வென்றது காங்கிரஸ். தெலுங்கானாவில் பிஆர்எஸ் ஆட்சியை அகற்றியுள்ளது காங்கிரஸ். அவ்வளவுதான். மற்ற தேர்தல்களில் தனித்து நின்று காங்கிரஸ் சந்தித்தது சரிவையே!
இன்றைய தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஒரு பாடம். வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற, எவ்வளவு வலிமையான கூட்டணியை அக்கட்சி அமைக்க வேண்டும் என்பதை இனியாவது தீவிரமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், இன்று 3 மாநிலங்களில் முடிவுரை எழுதப்பட்டது போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு 'ஜன கண மன' தான்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications