கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) நடத்தி வரும் மாபெரும் இளைஞர் எழுச்சிப் போராட்டம் காரணமாக, டெல்லி முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இடதுசாரி மாணவ அமைப்புகள் திரண்டு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள சூழலில், டெல்லியில் எவ்வித சட்டம் ஒழுங்கு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்புப் படைகள் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளன.

Cockroach Janata Party Delhi Delhi police deployment CJP protest PM Modi house security heavy deployment Amit Shah residence barricades New Delhi Cockroach Janta Party Jantar Mantar rally Abhijeet Dipke leaves protest site Jantar Mantar protest legally restricted timings NEET UG exam irregularities demonstration Dharmendra Pradhan resignation demands youth non confrontational policing Delhi Left student wings AISA SFI support 4 2026

விஐபி இல்லங்களைச் சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு

ஜந்தர் மந்தரில் திரண்டுள்ள இளைஞர் பட்டாளத்தின் முக்கிய இலக்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருந்து வருகிறார். எனினும், போராட்டக்காரர்கள் விஐபி பகுதிகளை நோக்கி நகர்வதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் மிக முக்கியத் தலைவர்களின் இல்லங்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் வீடுகளுக்கு வெளியே நூற்றுக்கணக்கான கூடுதல் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் (Paramilitary Forces) குவிக்கப்பட்டு, 4 அடுக்கு தடுப்பு அரண்கள் (Barricades) அமைக்கப்பட்டுள்ளன.

2,000 போலீஸ் அதிகாரிகள்

டெல்லியின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தற்போதைய நிலவரப்படி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்துப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் விடுத்துள்ள முக்கியத் தகவலின்படி, "போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுடன் எவ்வித நேரடி மோதல்களிலோ அல்லது வன்முறையிலோ (Confrontation) காவல்துறை ஈடுபடக் கூடாது" என்று மிகக் கடுமையான ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களைக் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், சமாதானப்படுத்துதல் வழியாகவும் மட்டுமே கையாண்டு அமைதிப்படுத்த வேண்டும் என்று கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காக்கரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனரான அபிஜீத் திப்கே, தங்களது கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வந்த டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திலிருந்து தற்போது கிளம்பியுள்ளார். அபிஜீத் திப்கே எங்கு செல்கிறார், யாரை சந்திக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

மேலும் இந்த போராட்டம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலான காலக்கெடுவுக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து அபிஜீத் திப்கே வெளியேறியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+