"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்?
டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 7 பேரை இந்தியாவின் என்ஐஏ கைது செய்துள்ளது. அதில் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுத குழுக்கள் உடனான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
என்ஐஏ நடத்திய அதிரடி ஆக்ஷனில் அமெரிக்கக் குடிமகன் ஒருவர் சிக்கியுள்ளார். என்ஏஐ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஆறு உக்ரேனிய நாட்டினருடன் சேர்ந்த இந்த அமெரிக்கரையும் கைது செய்தது. ஆளில்லா விமானப் போர்ப் பயிற்சி, சட்டவிரோத எல்லை கடப்பு, வடகிழக்கு இந்தியப் பகுதியிலுள்ள ஆயுதக் குழுக்களுடனான தொடர்பு போன்றவை குற்றச்சாட்டுகள் இவர் மீது முன்வைக்கப்படுகிறது.

அமெரிக்கர்
கைது செய்யப்பட்ட நபர் மேத்யூ ஆரன் வான்டைக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேத்யூ ஆரன் ஒரு பாதுகாப்பு ஆய்வாளர், போர் நிருபர், ஆவணப்படத் தயாரிப்பாளர் ஆவார். 2011ஆம் ஆண்டு லிபிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து போராடிச் சிறைப்பட்ட போதுதான் அவரது பெயர் சர்வதேச அளவில் அறியப்பட்டது.
லிபியாவில் இருந்து திரும்பிய பின், வான்டைக்கா "சன்ஸ் ஆஃப் லிபர்ட்டி இன்டர்நேஷனல்" (SOLI) என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு உலகின் மோதல் உள்ள பகுதிகளில் உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த விவகாரத்தில் மேத்யூ கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். மேலும், மூன்று உக்ரேனியர்கள் லக்னோவிலும், மற்ற மூவர் டெல்லியிலும் பிடிபட்டனர். இந்த ஏழு பேரும் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
என்ன நடந்தது!
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயணித்த வழி, சதித் திட்டத்துக்கான ஆதாரங்கள் மற்றும் கூட்டாளிகள் குறித்து விசாரிக்க 15 நாட்கள் காவல் வேண்டும் என NIA கோரியது. நீதிமன்றம் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கு NIAக்கு அனுமதி அளித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மார்ச் 27ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
மொத்தம் 14 உக்ரேனியர்கள் சுற்றுலா விசாக்களில் வெவ்வேறு தேதிகளில் இந்தியா வந்துள்ளதாக என்ஏஐ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர்கள் கவுகாத்திக்கு விமானத்தில் சென்று, தேவையான ஆவணங்கள் இன்றி மிசோரம் வழியாகச் சட்டவிரோதமாக மியான்மருக்குள் நுழைந்துள்ளனர். மியான்மரில் உள்ள இனம் சார்ந்த ஆயுதக் குழுக்களுக்கு (EAGs) ஆளில்லா விமானப் போர் பயிற்சிகளை நடத்துவதே இவர்களின் நோக்கம்.
டிரோன்கள்
ஐரோப்பாவில் இருந்து மியான்மருக்கு, இந்தியா வழியாக அதிகளவிலான ஆளில்லா விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதை இந்த EAG குழுக்களால் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு இந்த டிரோன் விமானங்கள் இயக்க பயிற்சி கொடுக்கவே வெளிநாட்டினர் சென்றதாகக் கூறப்படுகிறது. மியான்மரில் செயல்படும் பல ஆயுதக் குழுக்களுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புகள் உள்ளதாக NIA கூறுகிறது.
இக்குழுக்கள் இந்தியக் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள், கருவிகள், பயிற்சிகளை வழங்குவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல். இப்போது சிக்கியுள்ள இந்த நெட்வொர்க்கிற்கு பின்னலுக்கு இந்தியாவிற்குள் உள்ளூர் தொடர்புகள் உள்ளனவா, ஆளில்லா விமானங்கள் இந்தியப் பகுதி வழியாக எப்படி அனுப்பப்பட்டன என்பவை தற்போது ஆராயப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட செல்போன்களும் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மிசோரம் முதல்வர்
முன்னதாக 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமாவ வெளிப்படையாகவே ஒரு எச்சரிக்கை விடுத்தார். அதாவது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூலிப்படையினர், முன்னாள் சிறப்புப் படை வீரர்கள் உட்பட வெளிநாட்டினர், மியான்மரின் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் உள்ளூர் எதிர்ப்பு குழுக்களுக்குப் பயிற்சி அளிக்க மிசோரம் வழியாக மியான்மருக்குள் நுழைவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது கிட்டத்தட்ட அது தொடர்பாகவே வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை














Click it and Unblock the Notifications