பாகிஸ்தானை இனி தாக்கினால் சவுதி அரேபியா வரும்.. ‘மெக்கா' ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சவுதி அரேபியாவை ஏமன் ஹவுதிகள் தாக்கி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் 8 ஆயிரம் பேர் சவுதி அரேபியாவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானின் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் 'மெக்கா' ஒப்பந்தம் தான். இதன் காரணமாக தான் சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் உதவிக்கு சென்றுள்ள நிலையில் இந்த 'மெக்கா' ஒப்பந்தம்' எப்படி இந்தியாவை பாதிக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

mecca-pact-how-its-become-a-problem-for-india-in-conflicts-with-pakistan-details-here

இப்போது சவுதி அரேபியாவிற்கும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. ஹவுதி அமைப்பு என்பது ஈரான் ஆதரவில் ஏமனில் சனா உள்பட சில முக்கிய பகுதிகளை கைப்பற்றி செயல்பட்டு வருகிறது.

ஹவுதிகள் ஏவுகணைகள் கொண்டு சவுதி அரேபியாவின் ரியாத் உள்பட 2 விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர். ஹவுதிகளுக்கு, சவுதி அரேபியாவும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

முதற்கட்டமாக சவுதி அரேபியாவிற்கு, பாகிஸ்தான் உதவிக்கு சென்றுள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளை சேர்ந்த 8 ஆயிரம் வீரர்கள் சவுதி அரேபியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானின் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால் சண்டை சவுதி அரேபியா மற்றும் ஹவுதிகள் இடையே தான். ஆனால் பாகிஸ்தான் எப்படி வீரர்களை சவுதி அரேபியாவில் நிலைநிறுத்தி, ஹவுதிகளை தாக்க போர் விமானங்களை அனுப்பியது எப்படி? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதன் பின்னணியில் தான் 'மெக்கா' ஒப்பந்தம் உள்ளது.

இந்த 'மெக்கா' ஒப்பந்தம் என்பது முதலில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த ஒப்பந்தத்திற்குள் சமீபத்தில் துருக்கி சேர்ந்தது. இந்த ஒப்பந்தப்படி சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 3 நாடுகளில் யார் மீது தாக்குதல் நடத்தினாலும் அது மற்ற 2 நாடுகளின் மீதான தாக்குதல் என கருதி உடனடியாக பதிலடி கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி ராணுவம், கப்பற்படை, விமானப்படை உதவிகள் வழங்கப்படும் என்பதாகும்.

அந்த வகையில் தான் தற்போது சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். 'மெக்கா' ஒப்பந்தப்படி, சவுதி அரேபியா மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் தான் பாகிஸ்தான் தனது 8 ஆயிரம் வீரர்களை அங்கு நிலைநிறுத்தி உள்ளதோடு, ஹவுதிகள் மீதான வான்வெளி தாக்குதலுக்கு போர் விமானங்களை வழங்கியதும் தெரியவந்தது.

இதுதான் தற்போது இந்தியாவிற்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த 'மெக்கா' ஒப்பந்தம் இதுவரை வெறும் ஒப்பந்தம் என ஏட்டளவில் மட்டுமே இருந்தது. சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி என்று எந்த நாடுகளும் ஒப்பந்தத்தில் உள்ள இன்னொரு நாட்டிற்கு தங்களின் படை, போர் விமானங்களை அனுப்பி வைக்கவில்லை. குறிப்பாக ஈரான் - அமெரிக்கா போரில் ஈரான் பலமுறை சவுதி அரேபியாவை தாக்கியபோதும் கூட பாகிஸ்தான் தனது படைகளை அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் முதல் முறையாக ஹவுதிகளின் தாக்குதலை சமாளிக்க சவுதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் தனது படைகளை அனுப்பி வைத்துள்ளது. இது நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பகை உள்ளது.

பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடலாம். இப்படித்தான் கடந்த ஆண்டில் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது 3 நாட்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இனியும் பாகிஸ்தான் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடத்தினால் நம் நாடு உரிய முறையில் பதிலடி கொடுக்கும்.

அப்படி இந்தியா, பாகிஸ்தானுக்கு இனி பதிலடி கொடுத்தால் சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 'மெக்கா' ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கலாம். நம் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் அவர்களின் படைகள் மற்றும் போர் விமானங்களை குவிக்க வாய்ப்புள்ளது. இது நம் நாட்டுக்கு பிரச்சனையாக மாறலாம்.

இதுவரை நம் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா தனது படைகளை நிலைநிறுத்தும் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏனென்றால் இந்தியா - சவுதி அரேபியா இடையே நல்ல உறவு உள்ளது. ஆனால் தற்போது ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கு சவுதி அரேபியா பாகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளதால் எதிர்காலத்தில் நம் நாடு தாக்கும்போது பாகிஸ்தான் சவுதி அரேபியாவிடம் உதவி கோரலாம். அப்போது தற்போதைய உதவிக்கு கைமாறாக சவுதி அரேபியா தனது படைகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+