Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட இந்திய டிவி சேனல்கள் செயல்பாட்டில் திடீர் மாற்றம்! அடக்கி வாசிக்கின்றன.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள், ராணுவ நடவடிக்கை தொடர்பான நேரடி ஒளிபரப்பு, நேரடி செய்தி வெளியீடுகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படைகளின் இயக்கம் தொடர்பான நேரடி தகவல், வீடியோ அல்லது கிடைத்த அடிப்படையிலான தகவல்களை வெளியிடக் கூடாது என எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை இலக்காக கொண்டு இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் நடத்தியது.

india pakistan Media Defence

இதனையடுத்து பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் மோதிக்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நேரடி ஒளிபரப்புகள், சமூக ஊடக பதிவுகள் மூலம் ராணுவத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிய வந்தால், எதிரி நாடுகள் அதைப் பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து, கேபிள் தொலைக்காட்சி விதிகள், 2021 - விதி 6(1)(p)-ன் படி தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளும் எந்தவொரு எதிர் தீவிரவாத நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பக் கூடாது. இத்தகவலை அவர்களாகவே அடிக்கடி அறிவிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முந்தைய சம்பவங்களான கார்கில் போர், மும்பை தாக்குதல், மற்றும் கந்தகார் விமான கடத்தல் போன்றவைகளில் நேரடி ஊடக ஒளிபரப்புகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின.

இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் எதிரிகள், பாதுகாப்பு படை தொடர்பான புரிந்து கொள்ள உதவியதை மத்திய அரசு நினைவுபடுத்தியுள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கைகள், பாதுகாப்பு படைகள் இயக்கம் தொடர்பான நேரடி ஒளிபரப்பு, சமூக ஊடகங்களில் நேரடி வீடியோ பதிவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வமான தகவல்கள் மற்றும் விளக்கங்களை மட்டுமே அதிகாரிகள் வெளியிடுவர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முந்தைய அனுபவங்களை நினைவில் கொண்டு, ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். விதிகளை மீறு கேபிள் தொலைக்காட்சி விதிகள், 2021 - விதி 6(1)(p) ஐ மீறும் தொலைக்காட்சி சேனல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பாக நிறைவேற்ற ஊடகங்கள், சமூக ஊடக பயனர்கள் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையின் காரணமாகத் தான் தற்போது இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை மட்டுமே காட்டி வருகின்றனர். ராணுவத்தின் தாக்குதல் தொடர்பான வீடியோக்களை வெளியிடாமல் இருக்கிறது.

முன்பெல்லாம் சிறு நகர்வுக்கும் பெரும் கூச்சல்போட்டு டிவி ஆங்கர்கள் பேசுவது வழக்கம். இப்போது எந்த நகர்வையும் காட்டாமல் தவிர்ப்பதால் அதிகமாக சத்தம் போடுவதும் இல்லை. பழைய தூர்தர்ஷன் பார்ப்பதை போலதான் பல வட இந்திய ஊடகங்கள் காட்சியளிக்கின்றன..

கடந்த காலங்களில் சில தாக்குதல் சம்பவங்கள் அதனை உடனுக்குடன் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்கள். குறிப்பாக வட இந்திய சேனல்கள் இந்தியாவின் தாக்குதலை தற்போது நேரடியாக காட்டுகிறோம் என கூறியே அதனை வெளியிடுவார்கள். இதனால் எதிரி நாடுகள் நமது ராணுவ பலம், ஆயுதங்கள் மற்றும் இருப்பு ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் என்பதால் தற்போது இந்த கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+