ஹனிமூன் கொலை.. கணவரை கொல்ல உறவினர் மூலம் கூலிப்படைக்கு பணம் கொடுத்த சோனம்! ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றபோது, கணவனை மனைவி கொலை செய்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொலைக்கு பணம் உதவி செய்ததாக, மணப்பெண்ணின் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்காக முன்பணம் செலுத்திய ஜிதேந்திரா

24 வயதான சோனமுக்கும், 29 வயதான ராஜாவுக்கும் மே 11-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் திருமணம் நடந்தது. சோனத்துக்கு ஏற்கனவே ராஜ் என்பவருடன் உடன் காதல் இருந்திருக்கிறது. இருப்பினும் இதனை பெண் வீட்டார் மறைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

Meghalaya crime police

இந்தூரில் திருமணம் முடிந்த பிறகு, ராஜா மற்றும் சோனம் தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றனர். மே 23-ம் தேதி நாங்ரியாட் கிராமத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர். ஆனால், 24ம் தேதி முதல் இவர்களை காணவில்லை. நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஜூன் 2-ம் தேதி ராஜா மட்டும் சடலமாக கண்டுக்கப்பட்டார். என்ன நடந்தது? என்பதை தெரிந்துக்கொள்ள சோனமிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும். ஆனால் சோனம் காணவில்லை.

சோனம் காணவில்லை என தேடிய நிலையில், உத்திரபிரதேசத்தின் காசிப்பூரில் அவர் இருப்பது தெரியவந்தது. பின்னர் நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திற்கு முன்னர், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஆகாஷ், விஷால் மற்றும் ஆனந்த் ஆகியோர் உத்தரபிரதேசம், இந்தூர் மற்றும் மத்திய பிரதேசம் என மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர். சோனத்தின் காதலன் ராஜ் பின்னர் கைது செய்யப்பட்டார்.

போலீசில் சரணடைந்த சோனம், தனது கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோனமின் சகோதரர் கோவிந்த் கூறுகையில், "என் குடும்பத்தினர் சோனத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டனர். நாங்கள் ராஜாவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க உதவுவோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சோனமை தூக்கிலிட வேண்டும்" என்றார். இந்த வழக்கில், புதிய திருப்பமாக, சோனம் உறவினர் ஜிதேந்திரா மீதும் போலீசுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோனமின் உறவினர் ஜிதேந்திர ரகுவன்ஷி குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், கூலிப்படையே சேர்ந்த நபர்களுக்கு இவரது மொபைலிலிருந்துதான் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது.

போலீசாரின் தகவலின்படி, கூலிப்படையினரான ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சவுகான் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோருக்கு சோனம் மே 23-ம் தேதி பணம் அனுப்பியுள்ளார். இந்த பணப்பரிவர்த்தனை ஜிதேந்திராவின் யுபிஐ கணக்கிலிருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராஜா கொலை செய்யப்பட்டதும் மே 23-ம் தேதிதான். ஜிதேந்திரா இந்த பணத்தை கொலைக்கு முன்பே கொடுத்தாரா அல்லது கொலைக்கு பிறகு கொடுத்தாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "பணம் அனுப்பியதற்கான காரணம் அவருக்குத் தெரியுமா? என நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

ஆகாஷ், விஷால் மற்றும் ஆனந்த் ஆகிய மூவருக்கும் சோனம் 20 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கிவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+