திரிபுரா பிப்.16; மேகாலயா, நாகாலாந்து பிப்.27-ல் சட்டசபை தேர்தல்; மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கை!
டெல்லி: திரிபுரா மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 16-ந் தேதியும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27-ந் தேதியும் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 3 மாநில சட்டசபை தேர்தல்களில் ப்திவானா வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாகாலாந்து மாநில சட்டசபையின் பதவிக் காலம் மார்ச் 12-ல் முடிவடைகிறது. மேகாலயா மாநில சட்டசபையின் பதவிக் காலம் மார்ச் 15, திரிபுரா மாநில சட்டசபையின் பதவிக் காலம் மார்ச் 22-ல் முடிவடைகிறது. இதனையடுத்து 3 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மேகாலயா
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 31 எம்.எல்.ஏக்கள்.
மேகாலயாவில் என்.பி.பி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், யுடிபி, பாஜக, பிடிஎப் ஆகியவை பிரதான அரசியல் கட்சிகள்.
2018-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் 21, என்.பி.பி 20, யுடிபி 6, பிடிஎப் 4, சுயேட்சைகள் 3, பாஜக 2, ஹெச்எஸ்பிடிபி 2;என்சிபி 1, கேஹெச்என்ஏஎம்-1
மேகாலயா சட்டசபையில் தற்போதைய நிலைமை: என்.பி.பி. 21, திரிணாமுல் காங்கிரஸ் 9, காங்கிரஸ்- 0; யுடிபி 8, பாஜக 3, பிடிஎப் 2
மேகாலயாவில் என்பிபி தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இம்மாநிலத்தின் முதல்வர் என்பிபி கட்சியின் கான்ராட் சங்மா.

நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்திலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 31 எம்.எல்.ஏக்கள்.
நாகாலாந்தில் என்டிபிபி, பாஜக, என்பிஎப், ஜேடியூ ஆகியவை பிரதான அரசியல் கட்சிகள்
2108-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தல் முடிவுகள்: என்பிஎப்- 26; என்டிபிபி 18; பாஜக- 12
நாகாலாந்து சட்டசபையில் தற்போதைய பலம்: என்டிபிபி 42; பாஜக- 12; என்பிஎப் 4
நாகலாந்து மாநிலத்தில் என்டிபிபி தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக நெய்பியு ரியோ பதவி வகித்து வருகிறார்.

திரிபுரா
திரிபுரா மாநிலத்திலும் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கும் பெரும்பான்மைக்கு 31 எம்.எல்.ஏக்கள் தேவை.
திரிபுராவின் பிரதான அரசியல் கட்சிகள் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகள்.
2018 தேர்தலில் பாஜக 36; மார்க்சிஸ்ட் கட்சி 16; காங்கிரஸ் 8 இடங்களில் வென்றன.
தற்போது திரிபுரா சட்டசபையில் பாஜக 33; மார்க்சிஸ்ட் கட்சி -15; காங்கிரஸ் 1 , ஐபிஎப்டி-4; காலி-7
திரிபுரா மாநில முதல்வராக பாஜகவின் மாணிக் சஹா இருந்து வருகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications