உத்தரப்பிரதேசத்தில் பாலிவுட் நடிகை வீட்டில் துப்பாக்கிச்சூடு! என்கவுண்டரில் இருவர் பலி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச போலீசார் இரண்டு பேரை என்கவுண்டர் செய்து பிடித்திருந்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.
பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர், காசியாபாத்தில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட ரோத்தக்கைச் சேர்ந்த ரவிந்திரா மற்றும் சோனிபட்டைச் சேர்ந்த அருண், சர்வதேசக் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 12 அன்று அதிகாலை 3:45 மணியளவில், பரேலியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் திஷா பதானியின் குடும்ப வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நேரத்தில் திஷா பதானியின் தந்தை (ஓய்வுபெற்ற துணை கண்காணிப்பாளர்), அவரது தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தாக்குதல் நடந்த சில நிமிடங்களில், கனடாவைச் சேர்ந்த பிரபல ரவுடி கோல்டி பிரார், சமூக ஊடகப் பதிவு ஒன்றில் இதற்குப் பொறுப்பேற்றார். பதானி மற்றும் அவரது சகோதரி இரண்டு மதத் தலைவர்களைப் பற்றிப் பேசிய கருத்துக்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார். அந்தப் பதிவில் அச்சுறுத்தல்களும், பல குற்றவாளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதனையடுத்து உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையின் (STF) நொய்டா பிரிவு மற்றும் டெல்லி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து காசியாபாத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவத்தின்போது குற்றவாளிகள், போலீசார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றனர் என்றும் இதனால் குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீசார் கூறியிருக்கின்றனர்.
இதில் ரவிந்திரா மற்றும் அருண் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்தச் சம்பவத்தின்போது ஒரு டெல்லி போலீஸார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். என்கவுன்டர் நடந்த இடத்தில் ஒரு க்ளாக் பிஸ்டல், ஒரு சிகானா பிஸ்டல் மற்றும் பல தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று காவல்துறை கூறியிருக்கிறது.
-
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications