Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீருடன் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதி.. இளைஞரை கருணை கொலை செய்ய அனுமதித்தபோது உருக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளைஞர் கடந்த 13 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா கண்கலங்கியபடி கருணை கொலைக்கு அனுமதி வழங்கியது அனைவரையும் கலங்க வைத்தது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரீஷ் ராணா. இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டில் விடுதியின் 4வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

mercy-killing-supreme-court-judge-pardiwala-tears-up-while-delivering-verdict-on-euthanasia-for-a-3

ஆனால் அவரது உயிரை காப்பாற்றிய டாக்டர்களால் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து ஹரீஷ் ராணாவை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து கவனித்து வந்தனர்.

படுத்த படுக்கையாக...

எப்படியாவது எங்களின் மகன் மீண்டும் திரும்பி வருவார் என்று தொடர்ந்து கவனித்து வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை ஹரீஷ் ராணாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஹரீஷ் ராணாவின் சுவாசத்திற்கு 'டிராகியோஸ்டோமி' மற்றும் உணவுக்கு 'காஸ்ட்ரோஜெஜூனோஸ்டிமி' குழாய்களை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஹரீஷ் ராணா செயலற்ற நிலையில் படுத்த படுக்கையாகவே இருக்கிறார்.

கருணை கொலைக்கு அனுமதி

இதற்கிடையே தான் வயதானதால் ஹரீஷ் ராணாவை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் ஹரீஷ் ராணாவை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

நீதிபதி பர்திவாலா கண்ணீர்

இந்த தீர்ப்பு வழங்கியபோது நீதிபதி ஜேபி பர்திவாலா கண்கலங்கினார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இது அங்கிருந்த அனைவரையும் கலங்கடித்தது. நீதிபதி ஜேபி பர்திவாலாவின் குரல் தழுதழுத்தது.

அப்போது அவர், ''ஹரீஷ் ராணா கீழே விழுவதற்கு முன்பு நன்கு படிக்கும் மாணவராக வலம் வந்தவர். கீழே விழுந்ததில் மூளையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அவர் மீளவில்லை. உயிர் காக்கும் கருவிகளின் உதவியில் உள்ளார். ஆனால் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதுபோன்ற வழக்கு மிகவும் நுட்பமானவை. நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். யார் வாழ வேண்டும்? யார் இறக்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது என்று முந்தைய முறை கூறியிருந்தோம்'' என கண்கலங்கினார்.

'பேசிவ்' கருணை கொலை

பொதுவாக 2 வகையான கருணை கொலைகள் உள்ளன. தற்போது ஹரீஷ் ராணா கருணை கொலையை ஆங்கிலத்தில் Passive euthanasia என்று சொல்கின்றனர். இதன் பின்னணி என்னவென்றால் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் உயிர் காக்கும் சிகிச்சை அல்லது உயிர் காக்கும் கருவிகளின் செயல்பாட்டை நிறுத்துவதாகும். இதன்மூலம் அந்த நபர் இயற்கையாகவே மரணமடைவார்கள். இந்த முறையில் தான் ஹரீஷ் ராணாவை கருணை கொலை செய்யவும், இதற்கான ஏற்பாட்டை எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு கருணை கொலை என்பது ஆங்கிலத்தில் Active Enthanasia என்பார்கள். இதில் ஒருவரை கருணை கொலை செய்யும் வகையில் வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தும் மருந்து செலுத்தும் முறையாகும். நம் நாட்டை பொறுத்தவரை கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதே இல்லை. முதல் முறையாக ஹரீஷ் ராணா வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

நாட்டிலேயே முதல் முறை

ஹரீஷ் ராணாவின் உடல்நிலை, பெற்றோரின் நிலைகளை கவனித்து உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. முன்னதாக கடந்த 2018, 2023ம் ஆண்டுகளில் கருணை கொலை செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்து அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து மீண்டும் கடந்த ஜனவரி மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கருணை கொலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் உச்சநீதிமன்றம் கருணை கொலைக்கு அனுமதி வழங்கி இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+