விவசாயிகள் கொலை வழக்கு: ஆஜராக வந்த மத்திய அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ் படை.. சர்ச்சை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம் பூரில் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனத்தை மோதச் செய்து 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜஸ் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று லக்கிம்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.
அவருக்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
"மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக நீங்கள் சிறப்பு உரிமை வழங்குகிறீர்களா, வேறு ஒருவராக இருந்தால் இப்படித்தான் போலீசில் ஆஜராக வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டிருப்பீர்களா," என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தது. மத்திய அமைச்சர் மகன் என்பதற்காக சிறப்பு சலுகை கொடுக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

காவல்துறை பாதுகாப்பு
இந்த நிலையில்தான், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சுற்றிலும் காவல்துறையினர் அணிவகுத்து பாதுகாப்புக்கு வந்ததை போல இன்று வந்திருந்த காட்சி உச்சநீதிமன்ற சந்தேகத்தை உறுதி செய்வது போல இருந்தது போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மீடியாக்களை நெருங்க விடவில்லை
காவல் நிலையத்தில் குவிந்திருந்த காவல்துறையினர், மத்திய அமைச்சர் மகனிடம் மீடியாக்கள் கேள்வி கேட்க விடாமல் பார்த்துக் கொண்டனர். காவல் நிலைய பின்வாசல் வழியாக ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டனர். இது காவல்துறையினரின் பணி கிடையாது. குற்றவாளியை கைது செய்வதுதான் அவர் பொறுப்பு. ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர் வரும்போது அவருக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு, மீடியாக்களை பக்கத்தில் விடவில்லை.

சாட்சிக்கான சம்மன்
மேலும், ஆஷிஷ் மிஷ்ராவிற்கு, சிஆர்பி 160 பிரிவின்கீழ் சம்மன் அனுப்பப்பட்டது. அதாவது சம்பவத்தின் சாட்சிக்குதான் இந்த பிரிவின் கீழ் சம்மன் அனுப்புவார்கள். ஆனால், மத்திய அமைச்சர் மகனை கொலை குற்றவாளியாக காவல்துறை கருதாமல் சாட்சியாக கருதி சம்மன் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகிறது.

விசாரணை எப்படி இருக்கும்
விவசாயிகள் மீதான தாக்குதலில் கொலை குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் சாட்சி என்ற வகையில் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார். எனவே அவரிடம் அடுத்தடுத்த நாட்களில் எந்த மாதிரி விசாரணையை காவல்துறை மேற்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

காவல்துறை பொறுப்பு
குற்றம் சாட்டப்பட்ட நபரின் தந்தை மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்கிறார், அதாவது காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவர். அப்படியிருக்கும்போது ஆஷிஷ் மிஸ்ராவிடம் விசாரணை எப்படி நடைபெறும் என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சியினர். இன்று நடைபெற்ற இந்த சம்பவங்கள் தங்கள் சந்தேகங்களை உறுதி செய்வதாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications