மின்சார வாகனங்கள் வாங்க போறீங்களா.. உடனே இதை பாருங்க.. நிதின் கட்கரி எடுத்த மேஜர் முடிவு
டெல்லி: ஆரம்பத்தில், மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருந்தது. இப்போது அந்த வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்தவுடன், உற்பத்தி செலவு குறைந்து விட்டது. எனவே, இனிமேல் மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிப்பது தேவையற்றது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிதெரிவித்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்றும் விரும்பிய மத்திய அரசு, மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்த மானியம் வழங்கி வருகிறது. அதற்காக கடந்த 2015ம் ஆண்டு Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles' (FAME) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்து, 2019-ம் ஆண்டு முதல் இரண்டாம் கட்டமாக FAME 2 திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இதன் மூலமும் தற்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 40% வரையிலும், மின்சார வாகனங்களுக்கு ஒரு கிலோவாட்/ஹவர்க்கு 15,000 ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் நேரடியாக மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வாகனத்தின் விலை குறைவாக உள்ளது.
எனினும் இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு வழங்கப் பட்டு வந்த மானியத்தைக் குறைப்பதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மானியம் குறைப்பு கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 40 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்த மானியத் தொகை 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பிய மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, மின்சார இரு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். சுமார் 3.3 லட்சம் இருசக்கர வாகன வாங்குபவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தின் படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நான்கு மாதங்களுக்கு சிறிய இ-ரிக்ஷாக்கள் அல்லது சிறிய மின்சார மூன்று சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000 உதவி வழங்கப்பட்டது. பெரிய ஆட்டோ ரிக்ஷா போன்ற முன்று சக்கர மின்சார வாகனம், வாங்கும் 50,000 ரூபாய் வரை உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கு இனிமேல் மானியம் அளிக்கத் தேவையில்லை என்று நிதின் கட்கரிதெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிகலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஆரம்பத்தில், மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த வாகனங்களுக்கான கிராக்கி அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி செலவு குறைந்து விட்டது. எனவே, இனிமேல் மின்சார வாகனங்களுக்கு மானியம் அளிப்பது தேவையற்றது.
வாடிக்கையாளர்களும் மின்சார வாகனம் அல்லது சி.என்.ஜி. வாகனங்களை தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வருகிறார்கள். எனவே, மின்சார வாகனங்களுக்கு இனியும் மானியம் அளிக்கத் தேவையில்லை. இனிமேல் மானியம் கேட்பது நியாமல்ல.. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வசூலிக்கும் ஜி.எஸ்.டி.யை விட மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. குறைவுதான்" இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரிபேசினார். நிதின் கட்கரிஇப்படி பேசியிருப்பதால், மின்சார வாகனங்களுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications