"வந்தேறிகள்".. "தாலியை கூட விட மாட்டார்கள்"..இஸ்லாமியர்கள் பற்றிய மோடி பேச்சு! பிடிஆர் சுளீர் பதில்
டெல்லி: நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதாக கூறி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் என ராஜஸ்தான் பரப்புரையில் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையாகி உள்ளது. அவர் தனது பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களை கடுமையாக விமர்சனம் செய்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் வரும் 26ம் தேதி நடக்கும் நிலையில், ராஜஸ்தானிலும் தேர்தல் நடக்க உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. அங்கிருந்து மொத்தம் 25 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வாவார்கள்.
மோடி பேச்சு: இதனால் அங்கு தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், Rest in Peace....Election Commission of India என்று கூறியுள்ளார். அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தியடையட்டும். என்று அமைச்சர் பிடிஆர் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.
திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை இதை பற்றி செய்துள்ள போஸ்டில், தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது! என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications