டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.கே.எஸ். விஜயன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற நிலையில், திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கடந்த 2021 ஜூன் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக் காலம் ஓராண்டாக இருந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் ஏகேஎஸ் விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் ஏ.கே.எஸ்.விஜயன்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004, 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனவர். இவர், தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாலமாகச் செயல்படுபவர். முதலமைச்சரோ, அமைச்சர்களோ டெல்லிக்கு அரசு முறை பயணமாகச் செல்லும்போது அனைத்து ஏற்பாடுகளையும் அலுவல் ரீதியாக டெல்லி சிறப்பு பிரதிநிதியே மேற்கொள்வார். அந்த வகையில், இந்தப் பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், டெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன், மூன்றாவது முறையாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications