பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு கோரிக்கை வைத்தேன்.. டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

பிரதமர் மோடி உடனான சந்திப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்குச் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்.

டெல்லியில் உதயநிதி

டெல்லியில் உதயநிதி

கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். அங்கு அமைச்சர் உதயநிதி தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்று பிற்பகலில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார் அமைச்சர் உதயநிதி.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். பிரதமர் உடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. டெல்லி வரும் போது தன்னை சந்திக்கும்படி பிரதமர் மோடி கூறியிருந்தார், அதன்படி இன்று அவரை சந்தித்தேன் எனத் தெரிவித்தார்.

நீட் பற்றி பிரதமரிடம்

நீட் பற்றி பிரதமரிடம்

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் மனநிலையை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். நீட் விலக்கு கேட்டபோது பிரதமர் மோடி சில விளக்கங்களைத் தந்தார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் தெரிவித்தேன் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள்

பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள்

மேலும், கெலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வாய்ப்பு தர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டதாகவும், ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்க நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் உதயநிதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+