பெண்கள் வளர்ச்சிக்காக.. மிஷன் ஷகி , மிஷன் வாத்சல்யா, போஷன் 2.0 திட்டங்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு
பெண்கள் வளர்ச்சிக்காக மிஷன் ஷகி , மிஷன் வாத்சல்யா, போஷன் 2.0 ஆகிய முன்னெடுப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
டெல்லி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை வழங்க மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களான மிஷன் சக்தி, மிஷன் வாத்சல்யா, அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 போன்ற திட்டங்களை மத்திய அரசு முழுமையாகச் சீரமைத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு முதல், ஆண் பெண் என இரு பாலினருக்கும் பிரத்யேக அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் செயல்முறை தொடங்கியது. அதன் பின்னர், பெண்கள் சார்ந்த மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு நிலையான பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடந்து வருகின்றன.
மத்திய பட்ஜெட் நிதியாண்டு முழுவதும் தனிநபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதில் பிரத்யேகமான, தெளிவான பாலின முன்னோக்கு இருப்பது மிகவும் முக்கியமாகும்.

ஊரடங்கு காலத்தில், வீடுகளில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துள்ள. இவை தவிர, அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால், மகப்பேறு மற்றும் தாய் சேய் நலப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக, பல பெண்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் ஒரு பெரிய பங்கைப் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன், பெண்கள் வளர்ச்சிக்காக மிஷன் ஷகி , மிஷன் வாத்சல்யா, போஷன் 2.0 ஆகிய முன்னெடுப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்காவது முறையாக இன்றைய தினம் பட்ஜெட் உரையை வாசித்தார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. அப்போது, "உலகளவில் இந்திய பொருளாதாரம் தான் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது. ஆகவே அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
எப்போதுமே மிக நீண்ட நேரம் பட்ஜெட் உரை வாசிப்பவர் என்ற பெயரை பெற்றவர் நிர்மலா சீதாராமன். ஆனால் இம்முறை மிக விரைவாகவே பட்ஜெட் உரையை வாசித்து முடித்துவிட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அவர் 2 மணி 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். இதுவே இந்திய வரலாற்றில் மிக நீண்ட உரையாக அமைந்தது.
அதேபோல 2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 மணி 42 நிமிடங்கள் உரை நிகழ்த்தி தனது சொந்த சாதனையை முறியடித்தார். ஆனால் இம்முறை விரைவாகவே முடித்தார். இன்றைய தினம் 90 நிமிடங்களில் பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்தார். சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிக மிக குறைந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆகும்.












Click it and Unblock the Notifications