இது ரொம்ப மோசம்.. திடீரென எகிறியடிக்கும் கொரோனா.. மருத்துவமனையில் ஒத்திகை.. ஹைதராபாத்தில்
டெல்லி: கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் டிச. 14 முதல் 16 வரையிலான நாட்களில் mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டில் உலகெங்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நோய் என்றால் கொரோனா.. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் இதனால் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போனது.

கொரோனாவில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. இதற்கிடையே இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஒத்திகை பயிற்சி: இப்படி கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கும் சூழலில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் டிச. 14 முதல் 16 வரையிலான நாட்களில் mock drill எனப்படும் ஒத்திகை பயிற்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவே இந்த ஒத்திகை பயிற்சி நடத்தப்படுகிறது.
திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்தால் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, நோயாளிகளை எப்படி அழைத்து வந்து அட்மிட் செய்து சிகிச்சை அளிப்பது, அவர்களை எங்கே தனிமைப்படுத்தி வைத்திருப்பது என்பது குறித்து இந்த ஒத்திகை பயிற்சியில் சோதிக்கப்படும். இந்த மாதிரி பயிற்சியின் போது, படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருந்துகள் கையிருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை தயார் செய்யப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் சொல்வது என்ன: தெலுங்கானாவிலும் இதேபோல பயிற்சி சோதனையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெலுங்கானா சுகாதார வல்லுநர் கூறுகையில், "மத்திய அரசு அறிவுறுத்தல்படி இந்த சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இப்போது வரை நாம் கவலைப்படத் தேவையில்லை. இது வழக்கமான சோதனை தான்.. கவலை வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.
ஓமிக்ரான் BA.2.86 கொரோனாவின் துணை வேரியண்ட் ஆன இந்த ஜேஎன் 1 கொரோனா துணை திரிபு நமது அண்டை மாநிலமான கேரளாவில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாகக் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உட்சபட்ச அலர்ட் நிலையில் இருக்கிறது. மாநில அரசுகள் இங்கே எச்சரிக்கை கூட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை என்றாலும், ஒத்திகை பயிற்சியை நடத்தக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பரபர அலர்ட்: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இந்த ஓமிக்ரான் BA.2.86 கொரோனாவின் துணை வேரியண்ட் ஜேஎன்.1 புதியது எல்லாம் இல்லை. இவை ஏற்கனவே கடந்த செப். மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இப்போது உலகின் பல பகுதிகளுக்கும் இது பரவியிருக்கிறது. நவம்பர் மாதமே இதைக் கவனிக்க வேண்டிய வேரியண்ட் என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. இப்போதும் பதிவாகும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 27% இந்த வேரியண்ட் காரணமாக ஏற்படுகிறது" என்றார்.
இந்தியாவில் நேற்று மட்டும் 335 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா அதிகரிக்கும் நிலையில், இன்றும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இப்போது குளிர் காலம் என்பதால் கொரோனாவுடன் சேர்த்து மற்ற வைரஸ் மற்றும் பாக்டீரியா பாதிப்புகளும் பரவுகிறது. வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பதால் இப்போது கட்டுப்பாடுகள் அவசியமில்லை என்றும் அதேநேரம் நாம் கவனமாக நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications