டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரயில்வே துறையை மறுசீரமைக்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே துறையை மறுசீரமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று கூடியது. அப்போது ரயில்வே துறையை மறுசீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Modi government led Union Cabinet approves to restructure of the Railways

அதன்படி ரயில்வே துறையில் மொத்தம் 8 பேர் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் இருந்த நிலையில் அவற்றை குறைத்து 4 உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும்.

ரயில்வே துறையில் உள்கட்டமைப்பு, நிதி, இயக்கம், சீரமைத்தல் வர்த்தக வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்கள் இருப்பர். ரயில்வே ஊழியர்களையும் ஒன்றாக இணைத்து இந்திய ரயில்வே நிர்வாக சேவை என அழைக்கப்படும். இதற்கான அறிவிப்புகளை பியூஷ் கோயல் வழங்கினார்.

கோ பேக்.. எடியூரப்பா காரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்புகோ பேக்.. எடியூரப்பா காரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்.. தாக்குதல்.. கேரளாவில் பரபரப்பு

அவர் கூறுகையில் குரூப் ஏ சேவையில் இருக்கும் மொத்தம் 8 குழுவினரும் ஒன்றிணைக்கப்படுவர். ரயில்வே துறையை நவீனமயமாக்குகிறோம். இது ஒரு பெரிய திருப்புமுனையாகும். துறைவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. முடிவெடுப்பதை விரைவுப்படுத்துவதையும் நிறுவனத்திற்கான ஒத்திசைவான பார்வையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.

அடுத்த ஆட்கள் தேர்வு முறையின் போது ஐஆர்எம்எஸ் அமல்படுத்தப்படும். பயணிகள் ரயில்களின் இயக்கத்தை அதிகரிக்க தங்க நாற்கர திட்டத்தை இரு பகுதிகளாக பிரிக்க இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு மேம்படுத்துவது 2 முதல் 3 ஆண்டுகளாகும்.

திட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டால் டெல்லியிலிருந்து மும்பைக்கு 10 மணி நேரத்திலும், டெல்லியிலிருந்து கொல்கத்தாவிற்கு 12 மணி நேரத்திலும் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

English summary
PM Narendra Modi government led Union Cabinet approves to restructuer of the Railways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X