வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 71% குறைந்துள்ளன... அமித்ஷா பேச்சால் சர்ச்சை
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் 71% குறைந்துவிட்டன; கடந்த 10 ஆண்டுகளில், பல அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன; 10574 ஆயுதமேந்திய இளைஞர்கள் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா எப்படி கூறுகிறார்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைமையில் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வடகிழக்கு கவுன்சிலின் 72-வது கூட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா ஆளுநர் இந்திரசேன ரெட்டி நல்லு, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா, மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், மேகாலயாவின் சமூக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகள் வடகிழக்கு பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். இந்தப் பிராந்தியத்தை பிரதமர் நரேந்திர மோடி உலகின் கவனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியிலும் மாற்றம் ஏற்படுட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், வடகிழக்குப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ளதால், சிக்கல்கள் குறைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, இந்தப் பிராந்தியத்துக்கும் டெல்லி மக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி பணியாற்றியுள்ளார் என்று அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி, மத்திய அரசின் முன்னுரிமையாக மாறியது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
வடகிழக்கில் பல்வேறு வகையான வனவிலங்குகள், நீர் ஆதாரங்கள் உள்ளன என்று அமைச்சர் கூறினார். இந்த இயற்கை பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், இப்பகுதியை விருப்பமான சுற்றுலாத் தலமாக மாற்றவும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டும் மிக முக்கியமான பணியை அரசு நிறைவேற்றியுள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பல அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் 10574 ஆயுதமேந்திய இளைஞர்கள் சரணடைந்து பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இது வடகிழக்கில் அமைதியைக் கொண்டு வந்துள்ளதுடன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதி 'அஷ்டலட்சுமி' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை ஒட்டுமொத்த நாடும் உலகமும் இப்போது ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் போது, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கு அமைச்சகம் நிறுவப்பட்டது என்று அமித் ஷா சுட்டிக் காட்டினார்.
வடகிழக்கின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது என்று அமித் ஷா கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், வடகிழக்கில் வன்முறை சம்பவங்கள் 71% குறைந்துள்ளன என்றும், வன்முறையால் பொதுமக்கள் இறப்பு 86% குறைந்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் போது, வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் மிகவும் வளமான பகுதியாக மாறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
-
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications